
ஒவ்வொரு முறையும் ஆசைதான்
உற்றார் உறவினரோடு பயணிக்க..
தடி போடும் வீரர்களைக் காண..
உற்சாகம் பொங்கும்
இளைஞர்களைப் கண்டிட..
தேர் நகரும் அழகினைப் பார்க்க..
தேர் இழுக்கும் மனங்களைக் வாழ்த்திட..
கிட்டத்தட்ட 20 வருடங்களிருக்கும்
தேரோட்டம் கண்டு..
இந்த வருடமும்
போன வருடம் போலத்தான்..
கண்கொள்ளாக் காட்சியினை
இலட்சோப இலட்ச கண்களோடு
நேரில் காணும் வாய்ப்பு பெறாத
என் கண்களுக்கு
மனசு சொல்லும் சமாதானம்
‘அடுத்த முறை நிச்சயம்
நேரில் காண்போம்’ என்பது மட்டும்..
தேரோட்ட நிகழ்வினை
உள்ளூர் தொலைக்காட்சியில் நேரலையில் காண
தேடிக் கொண்டிருக்கிறது
இந்தத் தேறும் மனசு..
ஆம் வடம் பிடித்து இழுக்க
ஆளில்லா இந்த தேர் மனசு!
