
ஒப்பாரிஓசைகள் ஓயவில்லை…கருணாபுரத்தில்
மட்டும் கடவுளில்லை.
வீதிக்குப் பிணம் பத்தென்று இலக்கில்லை…
விதியென்று
ஒதுங்கிவிட மனமில்லை.
ஆள்வோர்கள் அருளின்றிச்
செயலில்லை…யார்வரினும்
செயல் மாறவழியில்லை.
குடியின்றி நடைமுறை அரசில்லை..
.பிணம்விழுந்தால் அரசாங்கம் பொறுப்பில்லை.
ஏழைக்கென்று குடிப்பதற்கு கள்ளில்லை…
மதுவை அரசாங்கவிலைக்கு வாங்கப்பொருளில்லை.
தனிமனிதன் திருந்த ஒருவழியில்லை..
.எத்தனை அறம் கூவித்தடுத்தாலும் செவியில்லை.
அழுகைக்கு எந்நாளும் முடிவில்லை.
இன்னொரு செய்திவந்து எல்லாம் மறந்துவிடும்…
மிகையில்லை.
♦
