உதயம் ராம்/வாங்க சாகலாம்

செத்தால் திதி
கொடுத்த காலம் – அன்று
செத்தால் நிதி
கொடுக்கும் காலம் – இன்று

என்னை வாழ விடுங்கள் என்று
கெஞ்சிய காலம் – அன்று
என்னை சாகடியுங்கள்
என்று வேண்டும் காலம் – இன்று

தாலி கட்ட தங்கம்
தந்த காலம் மாறி
தாலியறுத்தால் நிதி
வரும் காலம் – இன்று

இனி இங்கே
வாழ்வதை விட
சாவது நல்லது!