
மென்மை என்னும் பெண்மை
தென்றலாய் வருடும் தனி சுகம்
இனிய முகம் காட்டும்
கனிவான பைங்கிளி
கம்பி வேலிக்குள் அடைத்தால்
வம்பில் முடியும் அல்லவா?
பெண்ணுக்கு வேலி அவளே!அவள்
கண்ணுக்குத் தெரியும் நல்லதும் தீயதும்.
நூலும்,கயிறும், கம்பியும் ஆணின்
ஆதிக்கத்தின் உச்சி அன்றோ?
எண்ணும் எழுத்தும் அறியா பெண்டிற்கு
பண்பும் பாசமும் பாடம்.
சொல்லிக் கொடுக்காமல், சொல்லித் தெரியாமலும் வளர்ந்த பெண்மை.
சொல் இன்றி கொய்திடும் கண்கள்
நில் என்று எரித்திடும் கற்பு.
எதற்கு இந்த கயிறும் கட்டும்?
தன்னம்பிக்கை அற்ற வர்க்கத்தின்
இயலாமையின் அடையாளமா?
காமத்தையும் காதலையும் கண்டு கொண்டவள்
தன்னை செவ்வனே காத்துக்
கொள்ளவும் தெரிந்த தாய்மை அல்லவோ?
