
தளைகளால் கட்டுண்டு கிடக்கிறேன் கரங்களுக்குச் சிறை கால்களுக்கு வேலி
மனம் ஒரு
சூறாவளி
எந்த வேலிக்கும் அடங்காது !
புறத்தளைகள் சட்டென்று கட்டவிழும்
என் வலிமை நீ அறியாய்
அக புற தளைகள்
கட்டவிழ்ந்து நான் புறப்படுவேன்
பார் வியந்து பார்க்கும்
பெண்ணின் சக்தி இதுவே !
24/06/2024
