
இன்டர்வ்யூ முடிந்து கிளம்பிய ரம்யாவுக்கு
அந்த வேலையும் தனக்கு கிடைக்க வாய்ப்பிரு
க்காது என்று தோன்றியது. இந்த ஏமாற்றம்
அவளுக்குக் கிடைக்கப்போவது மூன்றாவது
முறை. முகவாட்டத்துடன் திரும்பிய அவளிடம்
போன விஷயம் என்னாச்சு? அவள் பெற்றோர்கள் கேட்டபோது
” வேளை வந்தால் வேலை நடக்கும்னு சொல்லுவீங்க.
எனக்கு இன்னும் வேளைவரல”
சொல்லும்போதே அவள் கண்களை மறைத்த
கண்ணீரைக்கண்டு எப்படி ஆறுதல் சொல்வது என்று
அவர்களுக்கு குழப்பமாக இருந்தது.
மனக்கிலேசத்துடன் ரம்யா தன் அறை ஜன்னலருகில்
வந்து நின்று வெளியே பார்க்க த்துவங்கியபோது தோட்டத்தில்
ஜன்னல் அருகிலிருந்த மரக்கிளையில்
உட்கார்ந்து மரங்கொத்திப்பறவை ஒன்று
டொக் டொக் என்றுகொத்தி தனக்கான கூட்டை
அமைத்துக்கொண்டிருந்தது.
அதன் முயற்சியில் கைதேர்ந்த ஒரு தச்சனின்
நுணுக்கம்.
சற்றுநேரத்தில் கூடு ரெடியானதும் மரங்கொத்தி
தன் இரண்டு குஞ்சுகளுடன்
அதில் குடியேறியது.
அன்று இரவே அந்த ஏரியாவில் காற்றுடன்
கூடிய கனமழை துவங்கியது.
மரங்கொத்திப்பறவை கூடமைத்த அந்த மரம்
காற்றின் வேகத்துள் சிக்கித்தடுமாறி முறிந்து
கீழே சாய்ந்தது.
அதன் சப்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரம்யா
ஜன்னலருகில் வந்து பார்த்தபோது சேதமுற்று
சிதைந்து கீழே விழுந்து கிடந்த
மரக்கிளைகள் அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கி
யது.
அன்று முழு மனதுடன் அந்த மரங்கொத்திப்
பறவை செயல்பட்டு உருவாக்கிய கூடும் நிச்சயம்
சேதமடந்திருக்கும். பாவம் அந்தப்
பறவைக்கும் அதன் குஞ்சுகளுக்கும் அடிபட்டு
அவை இறந்திருக்குமோ?
வெளியே போய் பார்க்கக்கூட முடியாத அளவு
க்கு காற்றும் மழையும் இருந்தது.
ஏற்கனவே இருந்தமன உளைச்சலுடன் இந்தக் கவலையும்
சேர்ந்து கோள்ள ரம்யாவால் தூங்க முடியவில்லை.
மறுநாள் மதியம் அவளுக்கு ஆன்லைன்
இன்டர்வ்யூ ஒன்று இருந்தது.
அப்போது அவள் இருந்த மனநிலையில் அது
சரிப்பட்டு வருமா என்கிற சந்தேகம் நெஞ்சை
அழுத்த அவள் ஜன்னலுக்கு வெளியே பார்த்
தாள் .நல்லவேளையாக காற்றும் மழையும்
நின்று போயிருந்தது.
திடீரென்று டொக் டொக் என்ற சப்தம்.
ரம்யா தீவிரமாக வெளியேபார்த்தபோது அதே
மரங்கொத்திப்பறவை இன்னொரு மரத்தில்
கூட்டை உருவாக்கிக் கொண்டிருந்ததைக்
கண்டு ஆச்சரியப்பட்டாள்.
நல்ல வேளை அதன் உயிருக்கு ஆபத்தில்லை
விழுவதும் எழுவதும் வாழ்க்கை . அதை அந்தப்பறவை எத்தனை இதமான முறை
யில்தெளிவாக உணர்த்திவிட்டது என்பதை உணர்ந்த ரம்யா தன் ஆன்லைன் இன்டர்வ்யூ
வுக்குத்தயாரானாள்.
அந்த வேலை அவளுக்குக்கிடைத்து விட்டது
