அழகியசிங்கர்/பேய் வீடு

அந்த வீட்டிற்குக் குடி வந்த பிறகு வைத்தியநாதனுக்கு மட்டும்தான் தெரியும்.
வீட்டுக்காரர் சொல்லி விட்டார். அந்த வீட்டில் கல்யாணம் ஆகாத ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாள் என்று.
தன் வீட்டில் உள்ள யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. எல்லோரும் பயந்து விடுவார்கள் என்று. அவர்கள் மொத்தம் ஏழு பேர்கள்.
வைத்தியநாதனுக்கு 3 பிள்ளைகள்.அப்பா அம்மாவையும் சேர்த்து மொத்தம் ஏழு பேர்கள். இவ்வளவு பேர்கள் உள்ள குடும்பத்திற்கு எங்கே தாராளமாக இடம் கிடைக்கும்.
அந்த வீட்டில் இதுமாதிரியான குறையைத் தவிர வேறு
எதுவுமில்லை.
மனைவிக்கு சந்தேகம்.
எப்படி இவ்வளவு குறைச்சலாக வாடகைக்கு இந்த வீடு கிடைத்தது என்று.

அடிக்கடி அவள் அவனிடம் கேட்காமலில்லை.

வீட்டிற்குக் குடி வந்த புதுசுல் எதாவது அமானுஷ்ய சப்தம் கேட்கிறதா என்று கண் விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் வைத்தியநாதன்.
முதல் நாள் மெல்லிய சப்தம் கேட்டது. நல்லகாலம் எல்லோரும் தூங்கிக் கோண்டிருந்தார்கள்.
வைத்தியநாதன் சப்தம் வந்த திசையை நோக்கி நகர்ந்தான் .
அங்கு ஒரு பெண் மங்கலாகத் தெரிந்தாள். டம்பளரையும் டபராவையும் காப்பி ஆற்றுவதுபோல் ஆற்றிக் கொண்டிருந்தாள்.
வைத்தியநாதன் கிட்டே நெருங்கியபோது அவள் தென்படவில்லை.
வைத்தியநாதன் திரும்பவும் வந்து தூங்கினார்.
அதன் பிறகு அவர் அடித்துப் போட்டாற்போல் தூங்கினார்.

காலையில் மனைவி அவரைப் பார்த்து,”நல்லா தூக்கம் வருது இந்த வீட்டில்,” என்றாள்.

One Comment on “அழகியசிங்கர்/பேய் வீடு”

Comments are closed.