
நான்
கவிதை எழுதும்போது
எல்லோரும்
கவிதை எழுதுகிறார்களே
என்று தோன்றியது
நான்
கவிதைப் புத்தகம்
கொண்டு வரும்போது
எல்லோரும்
கொண்டு வருகிறார்களே
என்று தோன்றியது
விற்காமல்
வீட்டில் கவிதைப் புத்தகம்
தேங்கி
இருக்கும்போது
எல்லோர் வீட்டிலும்
கவிதைப் புத்தகமென்றால்
அப்படித்தான் என்று
கற்பனை
செய்ய முடிகிறது!
இப்போது
வீதிக்கு வந்து
கவிதைப் புத்தகத்தை
இலவசமாக
விநியோகிக்கத் தயாராக
இருக்கும்போது
எல்லோரும்
என்னைப் பார்க்காமல்
ஓட்டமாய்
ஓடுகிறார்களே
ஏன்..ஏன்…ஏன்..
