ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 79

25.06.2024 (செவ்வாய்க் கிழமை)

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
 மோகினி: வணக்கம்.
அழகியசிங்கர் : வணக்கம். 
ஜெகன் :  வணக்கம்
அழகியசிங்கர் :  சமீபத்தில் அண்ணா நூல் நிலையத்திற்குப் போயிருந்தேன்.
மோகினி : ஏன்?
அழகியசிங்கர் :  125வது இதழ் விருட்சத்தின் பில்லைக் கொடுப்பதுக்காகப் போனேன். அப்போது தற்செயலாக எம்.டி முகத்துக்குமாரசாமியைப் பார்த்தேன்.  
மோகினி :  பேசினீர்களா?
அழகியசிங்கர் :  பேசினோம்.  அவர் சொன்ன ஒரு விஷயத்தை என்னால் நம்ப முடியாமலிருக்கிறது.
ஜெகன் :  என்ன நம்ப முடியாமலிருக்கிறது.
அழகியசிங்கர் : அவர் ஒரு நாளைக்கு 200 பக்கங்கள் புத்தகம் படிப்பாராம். இதைத்தான் நம்ப முடியவில்லை.  அவர் ஒரு மணி நேரத்திற்கு 30 பக்கங்கள் படிப்பாராம்.  கூடவே நோட்ஸ் எடுத்துக்கொண்டு வருவாராம்.
ஜெகன் : அவரைப் பொறுத்தவரை அவர் சொல்வது சரியாக இருக்கும். அவர் பல பல்கலைக்கழகங்களுக்குச் சென்று லெக்சர் கொடுப்பவர்.  அவரால் அப்படிப் படித்துத்தான் ஆக வேண்டும்.
அழகியசிங்கர் :   உண்மைதான் ஆனால் 200 பக்கங்கள் என்பது அசாத்தியமான முயற்சியாக இருக்கும்.  இரவு நேரங்களில்தான் அவர் தொடர்ச்சியாகப் படிப்பாராம்.  நான் அவரிடம் கேட்டேன் விட்டு விட்டு படிப்பீர்களா? என்று.  அவர் இல்லை என்று பதில் சொன்னார்.

மோகினி : அடுத்தாளும் அண்ணா நூலகத்திற்குச் சென்றீர்களா?
அழகியசிங்கர் : ஆமாம். ஆனால் முதலில் எல் எல் எ லைப்பரரிக்குச் சென்று விட்டு அண்ணா லைப்பரரி சென்றேன். அங்கெல்லாம் போக நானோ காரைப் பயன்படுத்தினேன். காரின் முன்னால் உள்ள டயரை மாற்ற வேண்டும். ஓட்டுநரை ஏற்பாடு செய்துகொண்டு சென்றேன். எல்எல்எ பில்டிங் போனேன். விருட்சம் பில்லைக் கொடுத்துவிட்டு மனுஷ்ய புத்திரனைப் போய்ப் பார்த்தேன். அங்கே போனால் அவரைப் போய்ப் பார்க்க வேண்டுமென்ற என் எண்ணத்தை அன்று நிறைவேற்றிக்கொண்டேன்.
மோகினி : நீங்கள் பொதுவாக எந்த இடத்திற்கும் போவதில்லை அல்லவா?
அழகியசிங்கர் : ஆமாம். என்னால் முடிவதில்லை. இலக்கியக் கூட்டங்களையும் நான் தவிர்க்க நினைக்கிறேன்.
ஜெகன் : முக்கியமான விஷயத்தை நீங்கள் சொல்லவில்லை.
அழகியசிங்கர் : ஆமாம். என் நடைப்பயிற்சி நண்பர் நடராஜனின் புதல்வரின் திருமணம். நானும், மனைவியும் சென்றோம் சிறப்பாக நடந்தது திருமணம். அவருக்கு ஏராளமான நண்பர்கள். பல எழுத்தாளர்களைச் சந்தித்தேன். கண்ணதாசனைப் பார்த்து விருட்சம் 125வது இதழைக் கொடுத்தேன்.
ஜெகன்: இன்னும் நாளை பேசலாம்.
மோகினி : இன்று பேசியது போதும். இத்துடன் முடித்துக் கொள்ளலாமா?
அழகியசிங்கர். முடித்துக் கொள்ளலாம்.

                             (பதிவான நேரம் : இரவு 10.18)