வயதென்பது வெறும்
எண்தானா அல்லது
செய்திகள் சொல்லும்
மைல் கல்லா
கைகள் ஊன்றி எழுகையில்
கைத்தட்டி ரசித்து மகிழ்ந்த
அம்மா இன்று இல்லை
தட்டு தடுமாறி நடக்கையில்
விழாது பிடித்துக் கொள்ளும் அப்பாவும் இல்லை
திருடி திண்ணும் இனிப்பில்
பங்குக்கேட்க உடன் பிறந்தார்
உடன் இல்லை.
உடலோடு மனமும் சோர்வுரும் வேளை ஆறுதல் சொல்லிடும் உறவுகள் அருகில் இல்லை
மூப்பின் தாக்கம் இடை நின்று நட்பினைக்கூட இடுக்கன் களைய விடுவது இல்ல
முக்கலுடன் எழுந்து
முனகலுடன் நடந்து
தனியனாய் வெறிக்கும்
முதுமைக்கு
வயதென்பது வெறும்
எண்தானா அல்லது
செய்திகள் சொல்லும்
மைல் கல்லா.
()
