காட்டிக் கொடுத்து விட்டது..

அழகியசிங்கர்

இரண்டு நாள் விடாமல்

மழை பெய்தது

அவ்வளவுதான்

எல்லோரையும் காட்டிக்

கொடுத்து விட்டது

வீடு தாழ்ந்து கட்டியிருக்கிறது

என்றும் தெரிந்து விட்டது

தெருவில்

மழையும் சாக்கடையும்

கலந்து விட்டது

நாற்றத்தைத் தடுக்க முடியவில்லை

மழை பெய்ததால்

சுகாதார தொழிலாளியையும்

காட்டிக் கொடுத்து விட்டது.

எங்கள்

ஊர் எம்.எல்.ஏ யாரென்று

காட்டிக் கொடுத்து விட்டது

அரசாங்கம்

ஒன்றும் செய்ய முடியாமல் கைகளைப்

பிசைந்தது.

உறவினர்கள் நண்பர்கள் யாரென்றும்

தெரிந்து விட்டது.

எத்தனை முறைதான்

பாடம் நடத்தும் இந்த மழை

Like

Comment

0