சூர்ய குமார் பிடித்த கேட்ச்/Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

சூர்ய குமார் பிடித்த கேட்ச்சின்
பல்வேறு கோணங்கள் அடங்கிய காணொளியை ஐசிசி வெளியிட்டுள்ளது

இதில் மூன்று கோணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன

இந்த கேட்ச்சில் சர்ச்சை இருக்கிறது என்று கூறிக்கொண்டிருக்கும்
அனைவரும் கேட்ட “மேலிருந்து கீழ் நோக்கி” எடுக்கப்பட்ட கோணமும் அந்த காணொளியில் இருப்பது சிறப்பு

நானும் கடந்த நான்கு நாட்களாக இந்த காணொளிக்காகக் காத்துக் கொண்டிருந்தேன்

இந்தக் காணொளியை ஸ்க்ரீன் ஷாட் செய்து நாம் ஏற்கனவே பார்த்த கோணத்துடன் இணைத்து அளித்திருக்கிறேன்

இதில்
சூர்யா கேட்ச் பிடிக்கும் போதும்
பவுண்டரி லைன் உள்ளே இருக்கிறார்

அடுத்து சர்ச்சைக்குரிய அந்த மூன்றாவது அடியை எடுத்து வைக்கும் போதும்
அவரது காலணிக்கும் பவுண்டரி குஷனுக்கும் இடையே புற்கள் பச்சையாகத் தெரிகின்றது.

அவர் பவுண்டரி லைன் வெளியே தாவ முயற்சி எடுக்கும் போது அவரது ஷூ ஸ்பைக்சில் பட்டு புல் தரை மேலே லேசாக எழும்பியதை பவுண்டரி குஷனில் கால் பட்டதாக சர்ச்சை எழுப்பப்பட்டது.

அந்த சர்ச்சைகளுக்கெல்லாம் தற்போது முடிவு எட்டப்பட்டுள்ளது.

நன்றி ஐசிசி
இந்தக் காணொளியை வெளியிட நான்கு நாட்கள் எடுத்துக்கொண்டாலும் தரமான தரத்தில் காணொளி வெளியிட்டமைக்கு நன்றி

அந்த கேட்ச் மொமெண்டத்தை மாற்றக்கூடிய கேட்ச்
ஒரு வேளை அது சிக்ஸாக மாறியிருந்தால்
ஆட்டத்தின் மொமண்ட்டம் தென் ஆப்ரிக்கா பக்கம் சென்றிருக்கும்
அங்கிருந்து அவர்கள் வெல்லவும் செய்திருப்பார்கள்

சூர்ய குமார் யாதவ் செய்த சிறப்பான சம்பவம்
அவர் எடுத்த கடுமையான பயிற்சியின் பயனை
இந்தியா உலகக் கோப்பையாக அறுவடை செய்தது

கீழ்க்காணும் படத்தில் நாம் இதற்கு முன்பு கண்ட கோணம் சிறிய படமாகவும் புதிய கோணம் பெரிய படமாகவும் இணைத்துள்ளேன்

நன்றி

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை