சசிகலா விஸ்வநாதன்/இருமை

இருமை வேண்டேன்!
இருமை வேண்டேன்!
வெறுமனே புலம்பாதீர்!
மறுமையின் அச்சமா?
இம்மையின் துயரமா?
இம்மையில் மாசற்று,
இனிதாய் வாழ;
இருமையும் இன்பம்
தரும்; இடுக்கண் இன்றி.
எதார்த்தமாய் ஒரு வினா:
இருமையை கடந்த
ஒன்றை,என்றேனும்
எங்கேனும் கண்டீரா?
உரைத்ததா; அது உம்மிடம்?
“இருமையை கடந்தேன் என்றே”!
ஓர்மின்!பகர்மின்!
பின்னரே கேண்மின்
இருமை வேண்டேன்!
இருமை வேண்டேன்!