புனிதஜோதி கவிதை

எங்கள் ஊர் கோவில் வாசலில்
கல் யானையைக் கண்டவுடன்
உன்னை ஓடவிட்டு
நடக்க விட்டு
அழகு பார்க்கும்
கவிஞர் இருக்கிறார் தெரியுமா என்றேன்?

ம் என்று குலைந்தது
எப்படி ?
ஏழுமலை தாண்டி
ஏழு கடல் தாண்டி
வரத் தெரிந்த அன்பிற்கு
தாமிரபரணிக்கும் வைகைக்கும்
வழி தெரியாதா என்ன?

இப்போது
ஆம் க்கும் இல்லைக்கும் இடையில்
என்னை அசைத்துவிட்டு
அசையாமல் நிற்கிறது
எங்கள் ஊர்
கல் யானை

2 Comments on “புனிதஜோதி கவிதை”

Comments are closed.