
சினிமாக்களில், நிகழ்காலத்தில் நடக்கும் கதையில், கடந்தகால சம்பவத்தைச் சொல்ல வேண்டி வந்தால், டார்டாய்ஸ் கொசுவர்த்திச் சுருள் சுழல்வது போல காட்டி, வரப்போவது flashback என்பதை உணர்த்துவர். கடந்தகால நிகழ்வுகள் ஒரே blocகாக இருக்கும், பிட்பிட்டாக இருக்காது. அப்படியான படங்கள் Linear narration என்பது.
மாறாக,
பல சீன்ஸ் வந்துகொண்டே இருக்கும். அதில் சில நிகழ்காலம், சில கடந்தகாலம் என மாறி மாறி வரும். ஆனால் அதை நாமாகத்தான் புரிந்து கொள்ள வேண்டும்..! முதலில் நமக்குக் குழம்பும், பின்னரே புரியும்..! இது ‘Non-linear Narration’..!
Non-Linear narration ஹாலிவுட்டில் முதலில் Pulp fiction என்ற படத்தில் உபயோகப்படுத்தப்பட்டது. Non-linear narration கொண்ட Shutter Island படத்தை நான் பார்த்தபோது அப்போது அதைப் புரிந்து கொண்டு என்னால் ரசிக்க முடியவில்லை..! சமீபத்தில் அந்த இரண்டு படத்தையும் OTTயில் (Prime or Netflix) பார்த்து, புரிந்து, ரசித்தேன்.
அந்த மாதிரி Non-linear , ஆனால், இன்னும் கூட complicated நரேஷன்..! அப்படி ஒரு தமிழ்ப்படத்தை எடுக்க் எவ்வளவு தைரியம் வேண்டும் அந்த டைரக்டருக்கு..! படம் முடியும் போது எல்லோருக்கும் புரியும், ரசிப்பார்கள் என்று எப்படி தைரியமாய் படம் எடுத்தார் என்று வியந்தேன், நேற்று Netflixஸில், ‘மகாராஜா’ படம் பார்த்த போது..! Man, he has done it..!
மிகத் தைரியமான, மிகப் புத்திசாலித்தனமான நரேஷன்..! ரொட்டீன் பழிவாங்கும் கதைதான் என்றாலும், அந்த வித்யாசமான Non-linear நரேஷனுக்காகத்தான் இதைப் பார்க்க வேண்டும் நண்பர்களே..!
படத்தில் மூன்று காலங்கள் ;
1.சேதுபதி இளைய வயது
சேதுபதி முதிய வயது, காதில் பேண்டேஜ் இல்லாமல்
- சேதுபதி முதிய வயது, காதில் பேண்டேஜோடு.
இதுதான் டைரக்டர் கொடுக்கும் க்ளூ, இந்த non-linear narrative கதையை நாம் ரசிக்க..!
படத்தில் இரண்டு இடங்களில் நாம் ‘அட..!’ என்று எழுந்து உட்காருகிறோம்:
1.லாரி ஆக்சிடெண்ட் போது வீட்டினுள் இருப்பது ஒரு பெண், ஒரு குழந்தை அல்ல, இரண்டு பெண்கள், இரண்டு குழந்தைகள் என்று தெரியும்போது..! அதை டைரக்டர் மிகச் சுவாரசியமாக நமக்குச் சொல்கிறார்..! - போலீஸுக்கு உண்மை தெரியும் என்ற இடம். ஆனால் அதைச் சொல்லும் போது டைரக்டர் இன்னும் கிளையராகச் சொல்லி இருக்க வேண்டும். இன்னும் அதிக இம்பாக்ட் இருந்திருக்கும்..!
நித்திலன் சுவாமிநாதன் என்ற புது டைரக்டராம்..! என்ன ஒரு self-confidence அவருக்கு என்று அவரை நினைத்து வியந்தேன்..! பாராட்டுகள் அந்த இளைஞருக்கு..!
நண்பர்களே, இது போன்ற படங்கள்தான் Film CREATION என்பது..! ஷங்கர் , மணிரத்னம், ராஜமௌலி போன்றோர் செய்வது Film MAKING. இனி நாம் Film creatorsஸைக் கொண்டாட ஆரம்பிப்போம்..!
