நியாண்டர் செல்வன்/அமெரிக்க ஜனாதிபதிக்கு கொடுக்கும் பாதுகாப்பு

அமெரிக்க ஜனாதிபதிக்கு கொடுக்கும் பாதுகாப்புக்கு சற்றும் குறைவில்லாமல் முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் வழங்கபடும் என சொல்லபடுகிறது.

பட்லர் (Butler, PA) நகரில் டிரம்ப் பொதுக்கூட்டத்துக்கு அருகே இருந்த கட்டிடங்களின் உச்சிகள் அனைத்தையும் காவல்துறை பரிசோதனை செய்தது. டிரம்ப் பேசிய பொதுகூட்டத்துக்கு அருகே இருந்த ஒரு கட்டிடத்தின் உச்சியில் இரு கரும்பூனை ஸ்னைப்பர் வீரர்கள் தயாராக பாதுகாப்புக்கு நின்றுகொண்டு இருந்தார்கள்

பொதுகூட்டத்துக்கு வரும் அனைவரும் மாக்னடிக் கருவி உதவியுடன் ஸ்கான் செய்யபட்டே உள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். திறந்த வெளி பொதுகூட்டம். பொதுகூட்டம் நடக்கையில், கொலையாளி அருகே இருந்த வயல்வெளியில் பதுங்கி இருந்தான். கூட்டம் துவங்கி, டிரம்ப் பேச ஆரம்பித்தவுடன் கூட்டத்தின் கவனம் முழுக்க அங்கே திரும்புகிறது.

கொலையாளி 20 வயது வாலிபன். தாமஸ் மேதுயூ க்ரூக் (thomas matthew crooks) என பெயர். அவனது பள்ளியில் அவன் மிக கடுமையாக ராகிங் செய்யபட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் அவன் ராணுவ உடை, வேட்டைகாரர் உடையை அணிந்து மென்டல் மாதிரி பள்ளிக்கு வருவான் என்பதால்..இதனால் மனநிலை பாதிக்கபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. அரசியல் கொலைமுயற்சியாகவும் இருக்கலாம். இன்னும் காரணம் தெளிவாகவில்லை

வயலில் பதுங்கி இருந்த தாமஸ், ஓடிவந்து கட்டிடத்தின் ஜன்னல், சுவரை பிடித்து தொற்றி மேலே ஏறுகிறான். கட்டிடத்துக்குள் காவல்துறை இருக்கலாம் என்பதால் படிகளை பயன்படுத்தவில்லை. கூட்டத்தில் இருந்த சிலர் அவனை பார்த்து “துப்பாக்கியுடன் ஒருவன் கட்டிடம் மேலே ஏறுகிறான்” என சத்தமிடுகிறார்கள்.

காவல்துறை அதிகாரி ஒருவர் மொட்டைமாடிக்கு விரைகிறார். தாமஸ் அதற்குள் ஏ.ஆர் 15 ரைபிளை எடுத்து, சுடுவதற்கு செட் செய்துவிட்டான். காவல்துறை அதிகாரி மேலே சென்றதும், துப்பாக்கியை அவரை நோக்கி திருப்புகிறான். அதிகாரி பயந்துகொன்டு, மேலும் ஆட்களை அழைத்துவர கீழே விரைகிறார். இது ஒரு மிகப்பெரும் செக்யூரிட்டி குறைபாடாக சொல்லபடுகிறது. அதிகாரி அவனுடன் துப்பாக்கி சூடு நடத்தி இருந்தாலே, இன்னொரு கட்டிடத்தின் உச்சியில் இருந்த ஸ்னைப்பர் டீம் உஷாராகி அவனை சுட்டு வீழ்த்தி இருக்கும்

இப்போது மிக குறைவான நேரமே தாமசுக்கு இருக்கிறது. காவல்துறையினர் கட்டிடத்தை நோக்கி விரைய, 150 மீட்டர் தொலைவில் டிரம்ப் பேசிக்கொன்டு இருக்கிறார். குறிவைக்க ஏதுவாக அவரது தலையில் சிகப்பு தொப்பி. சிகப்பு தொப்பியை குறிவைத்து முதல் குண்டை அனுப்புகிறான் தாமஸ். குறி தவறுகிறது. டிரம்ப்பின் தலையருகே சென்ற புல்லட் காமிராவில் பதிவாகிறது.

டிரம்ப் சற்று குழம்ப, அடுத்த புல்லட்டை தாமஸ் ஏவுகிறான். இது டிரம்பின் காதை கிழிக்கிறது. அவர் அதிர்ச்சியடைந்து காதை பிடிக்க, கையில் ரத்தம் கொட்டுகிறது. இதற்குள் மூன்றாவது புல்லட்டை தாமஸ் ஏவியிருந்தான். அதுவும் மிஸ் ஆகிறது

டிரம்ப் உடனே இது கொலைமுயற்சி என புரிந்துகொண்டு கீழே விழுகிறார். அவர் மேலே அதிரடிப்படை கரும்பூனை படையினர் விழுந்து குண்டுகள் தாக்காமல் அரண் அமைக்கிறார்கள். மேலும் ஐந்து குண்டுகளை தாமஸ் சுடுகிறான். இதில் டிரம்ப்பின் பின்னே அமர்ந்திருந்த ஒருவர் பலி ஆகிறார். இருவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருகிறார்கள்.இது அனைத்தும் 42 நொடிகளில் நடக்கின்றன

அதிரடிப்படை ஸ்னைப்பர் வீரர் டிரம்ப் கீழே விழுந்தவுடன் சுதாரிக்கிறார். எங்கே இருந்து குண்டு வருகிறது என பார்த்து, தாமஸ் இருந்த கட்டிடத்தின் உச்சியை நோக்கி சுடுகிறார். குறி தவற, அடுத்து துப்பாக்கியை அட்ஜஸ்ட் செய்து மீண்டும் தாமஸின் தலையை சிதறடிக்கிறார்

கீழே விழுந்த டிரம்ப்பை கரும்பூனையினர் எழுப்பி காருக்கு கூட்டி செல்கிறார்கள். எழுந்த டிரம்ப் “Fight, Fight” என கையை உயர்த்தி கர்ஜிக்கிறார். கூட்டம் யு.எஸ்.ஏ, யு.எஸ்.ஏ என முழக்கமிட காரில்

ஏறி, மருத்துவமனைக்கு செல்கிறார். கருப்புபூனை படையினருக்கு நன்றி தெரிவித்து ட்வீட் போடுகிறார். மற்றபடி ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார்

பைடன் அவரிடம் தொலைபேசியில் பேசுகிறார். விசாரணை துவங்கி நடந்துவருகிறது.

மற்றபடி:

“தேர்தல் வெற்றிக்கு டிரம்ப்பே தன்னை ஆள் வைத்து சுட்டுக்கொண்டார் (அல்லது) பைடன் அவரை கொலை செய்ய முயன்றார்” என எல்லாம் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பின்னூட்டம் போட வேண்டாம்

இரு தரப்பினரும் தற்போதுவரை மிகுந்த பொறுப்புடன் நடந்து வருகிறார்கள்.

தேர்தலில் டிரம்ப் வெற்றி உறுதி என்பது ஜூன் 28 விவாதத்தின் போதே தெரிந்தாகிவிட்டது. இந்த கொலைமுயற்சியால் சாதாரண வெற்றியாக இருக்கவேண்டியது, லேன்ட்ஸ்லைட் எனப்படும் இமாலய வெற்றி ஆகும் என்பது தான் பரவலாக பேசபடுகிறது.

இப்போது பைடன் தன் கட்சி சார்பில் அனைத்து தேர்தல் விளம்பரங்களையும் நிறுத்தி வைத்துள்ளார். விசாரணை முடிவில் என்ன தெரியவந்தாலும், இது மிகப்பெரும் பாதுகாப்பு குறைபாடு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனால் எப்.பி.ஐ மற்றும் கரும்பூனைபடையினரின் தலைமை பொறுப்பில் பல தலைகள் உருளலாம்

#history_is_his_story

~