சிவ.தீனநாதன்/ரமண விருந்து

  1. ஜீவன் முக்தர்கள் பாட்டு பாடுவார்களா என்ன?

(பகவான் இச்சிறுவனை நோக்கி, ‘நீ ஒன்றையும் பாடவில்லையே ஏன்?’ என்று கேட்டார்.)

பகவான் கிரி பிரதக்ஷிணம் செய்யும்போது அவருடன் பெரியவர்களும், சிறியவர்களுமாக ஒரு சிறு கூட்டம் கலந்து கொள்ளும்.
அப்படிக் கிரிவலம் வரும்போது அடியார்கள், சிறுவர்கள் உட்பட பக்திப்பாடல்களைப் பாடிக்கொண்டும், மந்திரங்களை ஓதிக்கொண்டும் செல்வார்கள்.
கூட்டத்தில் அனைவருமே இப்படி பாடிக்கொண்டு செல்கையில், ஒரு சிறுவன் மட்டும் பாட்டில் கலந்து கொள்ளாமல் மௌனமாகச் செல்வான். பகவான் நடக்கும்போது இப்பையனின் தோளில் கையை வைத்துக் கொண்டு நடப்பார்.
ஒருநாள் கிரிவலத்தின்போது, அனைவரும் பாடி முடித்துவிட்டனர். பகவான் இச்சிறுவனை நோக்கி, ‘நீ ஒன்றையும் பாடவில்லையே ஏன்?’ என்று கேட்டார்.

அச்சிறுவன் உடனே கூறினான், ‘ஜீவன் முக்தர்கள் பாட்டு பாடுவார்களா என்ன’?

இந்த எதிர்பாராத பதிலைக் கேட்ட பகவான் கலகலவென்று நகைத்தார்.

வித்தியாசமான நிகழ்வுகள் – 3/ரமணன்  – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)