ஆசிரியர் பக்கம்
15.07.2024 – திங்கட்கிழமை

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
மோகினி: வணக்கம்.
அழகியசிங்கர் : வணக்கம்.
ஜெகன் : வணக்கம்
அழகியசிங்கர் : சிறந்த பதிப்பாளர் விருது கிடைத்தது நெய்வேலி புத்தகக் காட்சி அமைப்பாளரிடமிருந்து.
மோகினி : அப்படியா?
அழகியசிங்கர் : நான் நேரிடையாகப் போய் வாங்க முடியவில்லை.
மோகினி : ஏன்?
அழகியசிங்கர் : உடல்நிலை இடம் கொடுப்பதில்லை. மேலும் என்எல்சி தங்குவதற்கு நல்ல இடம் கொடுத்தால் போயிருக்கலாம்.
ஜெகன் : உங்களுக்குப் பதில் யார் வாங்கினார்கள்?
அழகியசிங்கர் : விருட்சம் கடையைப் பார்த்துக்கொள்கிற மதிராஜ் வாங்கினார்.
ஜெகன் : நாம இதை வரவேற்க வேண்டும்.
அழகியசிங்கர் : ஆமாம். கடந்த 40 ஆண்டுகளாகச் செயல்படுகிற விருட்சம் வெளியீட்டைப் பெருமைப் படுத்திய
அந்த அமைப்புக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மோகினி : இப்போதெல்லாம் நிறைய சினிமா பார்ப்பதுபோல் தெரிகிறதே
அழகியசிங்கர் : ஆமாம். ஓடிடியில் அதிகமாக சினிமா பார்ப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறேன்.
மோகினி : இந்தியன் 2 பார்த்து விட்டீர்களா?
அழகியசிங்கர் : பார்த்துவிட்டேன். வெள்ளிக்கிழமை காலை பத்து மணி காட்சி வேளச்சேரி பீனிக்ஸில் பார்த்தேன்.
ஜெகன் : படம் எப்படி?
அழகியசிங்கர் : காட்சிகளைப் பார்த்து அசந்து விட்டேன். போரடிக்கவில்லை.
ஜெகன்: அதுதான் நமக்கு வேண்டியது.
மோகினி : இன்று பேசியது போதும். இத்துடன் முடித்துக் கொள்ளலாமா?
ஜெகன் : இரவு பத்தாகிவிட்டது. முடித்துக் கொள்ள வேண்டும்.
அழகியசிங்கர். முடித்துக் கொள்ளலாம்.
(பதிவான நேரம் : இரவு 10.16)
