அன்புச்செல்வி சுப்புராஜூ/எங்கள் காமராசர்


கனிந்த மனங் கொண்டவரு
கரிசல் மண்ணில் பிறந்தவரு
கறுப்புத் தங்கம் இவரு
கடமை தவறா வீரரு

படிக்காத மேதை பாரு
பள்ளிகள் பல திறந்தாரு
மழலை மொழி புரிந்தவரு
மாணவர்கள் பசி தீர்த்தாரு

திட்டங்கள் பல தீட்டியவரு
தீரமுடன் போரடியவரு
தொண்டுகள் பல செய்தவரு
ஏழைகளின் பங்காளரு

ஓங்கிய உருவம் பாரு
ஓயாத சேவை செய்தவரு
ஒப்பில்லாதத் தலைவரு
ஒன்னு மண்ணா பழகுவாரு

சிவகாமியின் மகன் இவரு
திசை புகழும் மன்னவரு
சீனி மிட்டாய் போல
தித்திக்கும் எங்கள் காமராசரு…

One Comment on “அன்புச்செல்வி சுப்புராஜூ/எங்கள் காமராசர்”

Comments are closed.