தினமும் ஒரு அம்மன் -1

நன்றி : தினமலர்

நில பிரச்சினை தீர….

வீடு, நிலம், சம்பந்தப்பட்ட பிரச்சனையால் சிரமப்படுபவர்களுக்கு இனி கவலை இல்லை. விழுப்புரம் வராகி கோயிலுக்குச் செல்லுங்கள். உடனடி தீர்வு கிடைக்கும். அத்தி மரத்தால் செய்த எட்டடி உயர வராகி சிலை இங்கு உள்ளது.

வராகி அம்மனுக்காக கட்டப்பட்ட முதல் கோயில் இது. அஷ்ட வராகிகளை ஒரே இடத்தில் இங்கு தரிசிக்கலாம். பூமாதேவியின் அம்சமான இவளை வழிபட்டால் வீடு, மனை, வயல் வாங்கும் யோகம் உண்டாகும். உயிர்களுக்கு எல்லாம். தாயான ராஜராஜேஸ்வரியின் குதிரைப்படையின் தலைவியாகவும், திருச்சானூரில் குடியிருக்கும் பத்மாவதி தாயாரின் அந்தப்புரத்தின் காவல் தெய்வமாகவும். இருப்பவள் இவள்.

இக் கோயிலில் மகா வராகி, ஆதி வராகி, ஸ்வப்பன வராகி, உன்மத்த வராகி, சிம்ஹாருடா வராகி, மகுஷாரூடா வராகி, அச்வாரூட வராகி வழங்கின என்னும் 8 அம்மன்கள் உள்ளனர். இவர்களை தரிசித்தால் பொன் பொருள் சேரும். வளர்பிறை பஞ்சமி திதி யன்று சிறப்பு பூஜை நடக்கிறது.

எப்படி செல்வது

விழுப்புரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து மூன்று கிலோ மீட்டர்.
நேரம் : காலை 9 – 12 மணிவரை.
4 மணி முதல் 8 மணி வரை.

தொடர்புக்கு : 9841410070.