
மீனுக்காக வளைந்து தவமிருந்த
கொக்கின் தலைச் சிறகைச்
ஊதி சிலுப்பி செல்லும் கூதற் காற்றிடம்
பனித்துளியில் பதுங்கி இருந்த கொக்கின் பிம்பம் கேட்டது
கூ சவில்லையா உனக்கு
வெண்ணெய் மெத்தையை தடவிப் படரும் சுகம்
அரிதினும் அரிதானது என்ற கூதற் காற்றைப் பார்க்க
சற்றே தலை நிமிர்ந்த கொக்கின் ஒற்றைக்
காலின் கீழே
வாளை ஒ ன்று
நழுவி ஓடியது

Super
Nice
நன்றி!
Super
கவிஞர் நாராயணன் சாமி ஐயா அவர்களே அருமையான கவிதை உங்கள் கவிதை பயணம் தொடரட்டும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கின்றேன் வாழ்த்துக்கள் 💐🎊👏