அதிரன் கவிதை

முதல் முறை
இசைக்கருவி ஒன்றை
கையில் ஏந்தி நிற்கிறேன்.
அதன் முறுக்கேறிய தந்திகள்
மீட்ட அழைக்கின்றன
என் விரல்களை.
மீட்டலின் நீட்டலில்
மெல்ல பரவுகிறது
அறை எங்கும்
ஒரு அபசுரத்தின்
முதல் சுரம்.