ஆத்மாநாம் பற்றி பிரம்மராஜன் எழுதியது

கவிஞர் ஆத்மநாமை ஞாபகபடுத்தும்படி நாளைக்கு நாம் அவர் கவிதைகளை வாசிக்கப் போகிறோம். உங்கள் கையில கிடைக்கிற கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். ஆத்மநாம் 18.01. 1951 இல் பிறந்து 6 .7.1984 ல் இறந்து போயிட்டார். எஸ் கே மசூதி மதுசூதன் . 1951 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதி பிறந்தார். சென்னையிலே வளர்க்கப்பட்டார் தாய்மொழி கன்னடமாக இருந்த போதிலும் ஆத்மநாமுக்கு தமிழில் ஈடுபாடு அதிகம். அம்பத்தூரில் சார் ராமசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பெற்று பிறகு வைஷ்ணவா கல்லூரிக்கு சென்றார். ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் பட்டப்படிப்பை அதே கல்லூரியில் மாலை வகுப்புகளில் சேர்ந்து படித்தார். 1967ஆம் ஆண்டு சதன் ஸ்விட்ச். சதர்ன் சுவிட்ச் கியர் கியர்ஸ் என்ற கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். 1968 ஆம் ஆண்டு வேலையை விட்டுவிட்டு கணக்குத் துறை சேர்ந்த விஷயங்களை கற்க ஆடிட்டர் அலுவலகம் ஒன்றுக்குச் சென்றார். இந்தப் பின்னணி அவருக்கு கோரமண்டல் கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலை கிடைக்க ஏதுவாக இருந்தது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு 1971 இல் தயார் உடைகள் தயாரிக்கும் நிறுவனமான ரெங்கா அப்பாரெல்ஸ்க்கு மாறினார். இங்கிருந்து தான் ஆத்மநாமின் சிக்கலான வருடங்கள் ஆரம்பிக்கின்றன. 1978 ஆம் ஆண்டு ஐயப்பன் என்பவருடன் சேர்ந்து டாப் டென் என்ற தயார் உடைகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை உருவாக்கினார். இந்த சமயத்தில்தான் ழ இதழையும் தொடங்கினார்.
தன்னுடைய நிறுவனத்தைக் கட்டி எழுப்ப இரவுகளிலும் வேலை செய்ய வேண்டி இருந்தது. இரண்டு மூன்று ஈடுபாடுகளில் ஒரே நேரத்தில் தீவிரமாய் இயங்கியபோது Affective Disorder என்ற மனநலத் தாக்குதல் ஏற்பட்டு 1979 புரசைவாக்கத்திலிருக்கும் தனியார் மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்றார்.
சிகிச்சைக்குப் பிறகு. இன்டர் கிராப்ட் என்ற கம்பெனியில் பணி புரிந்தார். ஆனால் அவருக்கு ஓய்வு முக்கியம் என்று மருத்துவர் கருதியதால் தொடர்ந்து பணிக்குச் செல்ல முடியாத சிக்கல் ஏற்பட்டது. மூளையின் அதி தீவிர இயக்கத்தை கட்டுப்பாட்டில் வைக்க ஆத்மநாம் Lithium, Hyportrym, Largatyl, Fenargon போன்ற மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டியிருந்தது. 1983 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பாக தனக்கு சிகிச்சைக்காகத் தரப்பட்ட மருந்துகளையே அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். காப்பாற்றப்பட்டார்.

இந்தச் சமயத்தில் அவர் இடைவிடாது படித்துக் கொண்டிருந்த நூல் ஏ. கே. இராமானுஜனின் தி ஸ்பீக்கிங் ஆப் சிவா.
1983 ஆம் ஆண்டு இறுதியில் Affective Disorderன் இரண்டாவது தாக்குதலால் ஆத்மாநாமிற்ககு ஏற்பட்டது. 1984 ஜனவரி இறுதிவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முழுவதும் அவர் பெங்களூரில் அவரது சகோதரர் ரகுநந்தனின் வீட்டில் இருந்தார். மார்ச் 9ஆம் தேதி (1984) தனக்குத் தரப்பட்ட மருந்துகளை உட்கொண்டு இரண்டாவது முறையாகத் தற்கொலை செய்ய முயன்றார். பின்னர்
நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெண்டல் ஹெல்த் அண்ட் நியூராலஜிக்கல் சயின்ஸஸ் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 1984 ஆம் ஆண்டு மார்ச் மாசம் 10ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை NIMHANSல் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். வீடு திரும்பிய பின்னர் தனது சகோதரர் வீட்டில் எவரிடமும் எதுவும் பேசாமல் .இருந்திருக்கிறார். ஏறத்தாழ உயிரற்ற மனித உடம்பாக ஆத்மாநாம் வீடு திரும்பியதாக அவரது சகோதரர் ரகுநந்தன் குறிப்பிட்டார். மார்ச் ச்சு 1984லிருந்து தனது இறுதி மறைவுவரை (ஜூலை 1984) ஆத்மநாதன் தனக்கு வந்த கடிதங்களையோ பத்திரிகைகளையோ அழைப்பிதழ்களையோ படிக்கவில்லை. பிரித்துக் கூடப் பார்க்கவில்லை. பெங்களூரில் தன்னுடைய சாவை முன்கூட்டி தீர்மானித்ததுபோல் ஏறத்தாழ 120 தபால் கார்டுகளை வாங்கி வைத்திருக்கிறார். நண்பர்களின் முகவரிகள் முதலிலிருந்து கடைசி வரை திருத்தம் செய்து வைக்கப்பட்டிருந்தன.