
நிறைவேறுமா?
நிறைவேறாதா?
பதற்றத்தை
கையில் பிடித்தபடி
அழைத்துச்செல்கிறான்
கனவை…
நெருக்கடிகள் சூழும் வேளையில்
திருவிழாவில் கைநழுவும்
குழந்தையைப் போல்
தொலைக்க நினைப்பான்..
கொள்கைப் பிடிமான நாளில்
கலவி முடிந்து
நெற்றியில் முத்தமிட்டு
அணைத்துக்கொள்ளும்
தலைவனைப்போல்
மகிழ்வான்..
பசியை நிரப்பி விட்டு
கலைகூத்தாடியை
வேடிக்கை காணும்
கனவிற்கு மட்டும்
எந்தவொரு வலியுமில்லை
விரட்டி அடிக்க
முடியாமல்
ஒட்டிக்கொண்ட
கனவினால்
பொதிசுமக்கும்
கழுதையாய்
மாறிய
மன முதுகில்
மட்டும்
எப்போதும்
பள்ளம்.
