ஆத்மாநாம்/குளிர் கண்ணாடிகள்

குளிர் கண்ணாடிகளை
அணிந்து கொண்டேன்
சாயம் பூசப்பட்ட உலகம்
ஒருவிதத்தில் அழகாகவே இருந்தது.
சாயம் பூசப்பட்ட மனிதர்கள்
என் கண்களை உற்றுப் பார்த்தனர்
ஒருவன் என்னைக் கேட்டான்
ஏன் இந்தக் கண்ணாடி..
ஆயிரம் காரணங்களை
நான் கூற எத்தனித்தேன்
உண்மையை அவன் நம்பவேயில்லை.
கணணாடியைக் கழற்றி வைத்தேன்
உலகம்
ஒருவிதத்தில் அழகாகவே இருந்தது.

One Comment on “ஆத்மாநாம்/குளிர் கண்ணாடிகள்”

Comments are closed.