எஸ்ஸார்சி/ஜனநாயகம்

அமெரிக்க பூர்வீகக் குடிகள்
அரைக் கோடிபேர்
அமெரிக்க மொத்த ஜனத்தொகையில்
ரெண்டு சதவிதம் இது
98 சதவிதம் வந்தேறிகள்
சமூகம்தான் இது
அமெரிக்காவில்
326 நிலத்திட்டுகளில்
வாழட்டும் அவர்கள்
ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்கள்
ரிசர்வேஷன் நிலம்.
சட்டம் ஒழுங்கு
நிதி ஆளுகையென
பூர்வீக குடிகளின்
அத்தனைப் பிரச்சனைக்கும்
மொத்தமாய் அரசாங்கமே
பொறுப்பு
மக்களால் மக்களுக்காக
மக்களுடைய
என்ன விளக்கம்
தருவார்களோ.

கவிதை வாசிப்பு இணைய அரங்கு