
முகநூலில் பகிர்ந்தவர்: ராம் ஸ்ரீதர்
(சிறு சிறு கதைகள் புத்தகத்திலிருந்து)
சிவதாசரின் பதுமை சொன்ன கதைகள் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். ராஜா விக்ரமாதித்தன் அரியாசனம் ஏறுவதற்கு முன் ஒவ்வொரு படியிலும் உள்ள தங்கப் பதுமை ஒரு கதை சொல்லி அதன் இறுதியில் ஒரு கேள்வி கேட்க, சரியான பதில் சொல்லாமல் அடுத்த படிமேல் எடுத்து வைக்க முடியாது என்ற ஏற்பாட்டில் பதினெட்டு கதைகள் கேட்டு நொந்து நூலாகி அவன்று மெல்ல மெல்ல அரியாசனம் ஏறினானாம்.
இந்தக் கதைகளில் ஒன்றைத் தழுவி எழுதியது இந்த சிசி கதை.
ஒரு ஊரில் ஒரு ராஜா. அவருக்கு விசுவாசமுள்ள மந்திரி. அவருக்கு எள்ளென்றால் எண்ணெயாகும் மனைவி தாய் சொல்க கேட்கும் மகள், தந்தை சொல் கேட்கும் மகன். எல்லாரும் செளக்கியமாக வாழ்ந்து வந்தனர். நாட்டில் சுபிட்சம் நிலவியது குழாயைத் திறந்தால் நல்ல ஜலம் வந்தது. ஸ்விட்ச் போட்டால் நல்ல வோல்டேஜில் கரண்ட் இருந்தது.
விதி சும்மா இருக்குமா? மந்திரியின் விசுவாசத்தைப் பரீட்சை பார்க்க ஒரு பபெரிய சோதனை ஏற்படுத்தியது.
ராஜாவின் உயிருக்கு ஒரு பெரிய ஆபத்து வரப்போகிறது. அவரைக் காப்பாற்ற வேண்டும் என்றால் மந்திரி தன் மகனை நரபலி கொடுக்க வேண்டும் என்று ஒரு கண்டிஷன் போட்டு பரசனம் போட்டதில் செய்தி வந்தது. அந்தப் பிரச்னம் தவறுவதே இல்லை மந்திரி ராத்திரிபூரா சிந்தித்தார் கையைக் கையால் குத்திக் கொண்டார் மகன் கேட்டான். அப்பா ஏன் ரெண்டு நாளா ஒரு மாதிரி இருக்கிங்க, ஏதாவது ப்ராப்ளம்னா எனக்குச் சொல்லுங்க என்றான்
“மகனே உன்னிடம் எப்படி அதைச் சொல்வேன்”
“என்னவாயிருந்தாலும் சொல்லுங்க.
நான் உங்கள் மகனல்லவா”!
“எப்படிடா சொல்வேன்?”
*மெகா சீரியல் மாதிரி இழுக்காதீங்க. என்ன மேட்டர் சொல்லுங்க!”
மந்திரி தயங்கித் தயங்கிச் சொன்னார். “மகனே என் இருபத் தைந்து வருஷ சர்வீசில் மன்னனைப் பல பொருளாதார யுத்த சங் கடங்களிலிருந்து காப்பாற்றியிருக்கிறேன். மந்திரியின் பொறுப்பு மன்னனைக் காப்பது என்பது நம் பரம்பரை குணம். அதில்தான் சிக்கல் ஏற்பட்டுவிட்டது. மன்னன் உயிரைக் காப்பாற்ற என்னை ஒரு பலி கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். நரபலி “
“அதுக்கென்னப்பா. பலி வாங்கிட்டா போச்சு. இதெல்லாம் இந்தக் காட்டுமிராண்டி உலகத்தில் சகஜம்தானே… யாராவது குடுமி அகப்படுவான்.
“சகஜம்தான் இருந்தாலும்..
“சொல்லுங்கள் அப்பா. மறுபடி இழுக்காதீங்க. என் கேர்ள் ஃப்ரெண்டைப் பாக்கப் போகணும்.”
“உன்னையல்லவோ நரபலி கேட்கிறது!” என்று மகனை நெர்வ ஸாகப் பார்த்தார் மந்திரி அவன் முகம் எந்தவிதமான அதிர்ச்சியும் சலனமும் காட்டாமல் அப்பொழுதலர்ந்த செந்தாமரை போல இருந்தது
“தந்தையே உங்கள் கடமையைக் காப்பதற்கு மகனாகிய நான் இந்த தியாகம் செய்யாவிட்டால் என்ன பிள்ளை நான். நீங்கள் தயங்கியிருக்கவே வேண்டாம். இதோ என்று மகன் அம்பாள் முன் தன் கழுத்தைச் சட்டென்று வெட்டிக் கொண்டு மிச்சமிருந்த ரிஃப்ளெக்ஸினால் அதை தன் கைகளில் ஏந்தி தரையில் வைத்தான் மகனுடைய இந்த அதிர்ச்சிகரமான செயலைக் கண்டு தாய்.”ஏன்யா போக்கத்தவரே அவன்தான தரேன்னு சொன்னா உன் புத்தி எங்க போச்சு நீயும் ஒரே மகனை போய் கேப்பியா யாருய்யா உனக்குக் கொள்ளிப் போடுவா மகன் இல்லாமல் எனக்கு என்ன வாழ்க்கை என்று மனைவி கழுத்தில் புடவை சுற்றிக் கொண்டு தன்னை மாய்த்துக் கொண்டாள் இதைப் பார்த்து மகளும். “அப்பனா நீ – என்று கிணறு இழுக்கும் கயிற்றில் தன்னை மாயததுக் கொண்டாள் மந்திரி மட்டும் மிஞ்சிப் போனார்
‘என் மன்னன் தீர்க்காயுசுக்காக இவ்வளவு பெரிய தியாகம் செய்த என் அற்புதமான குடும்பமே போனபின் எனக்கென்ன வாழ்வு?’ என்று அவரும் கோயில் சூலத்தால் தன்னை மாய்த்துக் கொண்டார்.
இதையெல்லாம் கேள்விப்பட்ட அரசன் மிகுந்த வருத்தப்பட்டு தேவியின் முன் சென்று, ‘என் ஒரு உயிருக்காக நான்கு உயிர்கள் சாவதா? இது நியாயமில்லை என்று தன்னையும் மாய்த்துக் கொள்ள கத்தியை உருவினான்
தேவி தோன்றினாள்.
“மன்னவனே நீ உன்னை மாய்த்துக் கொண்டால் அந்த வரத்தின் ஷரத்துகள் பொய்யாகிவிடும். ப்ரச்னம் தவறாகிவிடும். அதனால் மந்திரியையும், குடும்பத்தினர் மூவரையும் பிழைக்க வைக்கிறேன் * என்று தாமரைக் கரத்தை அருள் காட்டியதும் செத்துப்போன மூவரும் உயிர்பெற்று எழுந்தார்கள்.
இப்போது பதுமை கேட்கிறது, ஐந்து பேரில் சிறந்தவர் யார் என்று.
விக்ரமாதித்தன். “அந்த ராஜாதான் சிறந்தவன் மற்றபேர். கடமையைச் செய்தனர். எதிர்பார்த்ததைச் செய்தனர். அவன்தான் தனக்காக மற்றொரு குடும்பமே செத்ததை உணர்ந்து தன்னை மாய்த்துக் கொள்ள தயாரானான், அதனரல் அரசனே சிறந்தவன்” என்று பதில் அளிக்க…
பதுமை, “உன் பதில் சரிதான் என்னைக் கேட்டால், ராஜா நல்லவன் இவ்வளவு பெரிய தியாகத்தை ஏற்க மாட்டான் ஏதாவது செய்து பிழைக்க வைத்துவிடுவான் இதற்கெல்லாம் இந்தக் காலத்தில் இடம் இருக்கிறதே என்று முதல் பலியாகிய மகனைத்தான் புத்திசாலி என்பேன். ஒழிந்து போ அடுத்த படிக்கு ஏறு’ என்றது
