
நன்றி : தினமலர்
திருமணம் நடக்க….
திருமணம் நடக்கவில்லையே என்ற பெண்களின் வேதனையைப் போக்ககி, சந்தோஷமான வாழ்வைத் தரக் காத்திருக்கிறாள் கோவை கோனியம்மன்.
முன்பு காடாக இருந்த இப்பகுகுதியை இருளர்களின் தலைவன் கோவன் ஆட்சி செய்தார். அப்போது பஞ்சம் ஏற்பட அம்மனுக்கு பூஜை நடத்த மழையும் பெய்தது. இதன் பிறகு இருளர்கள் குலதெய்வமாக அம்மனை ஏற்றனர்.
பிற்காலத்தில் இப்பகுதியை மன்னர் இளங்கோசர் ஆட்சி செய்த போது சேர மன்னர் ஒருவர் படை எடுத்தார். அம்மனின் அருளால் போரில் இளங்கோசர் வெற்றி பெற்றார். பின்னர் கோவையின் மையப் பகுதியில் புதிய கோவிலைக் கட்டினார்.
இதுவே தற்போதுள்ள கோனியம்மன் கோவில்.
இங்கு வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். குழந்தை பேறு கிடைக்கும். நோய் தீரும். அம்மன் அருளால் திருமண வரம் பெற்றவர்கள் கோயிலிலேயே நிச்சயதார்த்தம்
நடத்துகின்றனர். கூடைய உப்பை நிரப்பி, அதன் மீது மஞ்சள் , தேங்காய் , வெற்றிலை , பாக்கு , பூ வைத்து திருமண செய்தியை உறுதி செய்கின்றனர். பஞ்சமுக விநாயகர் நவகிரக சந்நிதி இங்குள்ளது.
எப்படி செல்வது:
காந்திபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஆறு கிலோமீட்டர்.
சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து 10 கிலோமீட்டர்.
நேரம் :
காலை 6 லிருந்து 12:30 மணிவரை.
மாலை 4.30 லிருந்து 9:00 மணி வரை.
தொடர்புக்கு. 0422 239 6821, 239. 0150.
