ரஸிகன் கதைகள்/பலாச்சுளை

தங்கம்மாள் தன் வீட்டின் முன் தாழ்வாரத்தில் பலாப்பழத்தில் இளை எடுத்துக்கொண்டிருந்தாள். நல்ல தஞ்சாவூர்ப் பழம்; சுளை பெரி தாயும், தங்க நிறமாயுமிருந்தது; கூறுக்கு இருபது இருக்கும். வைத்தி நாதய்யர் தன் தகப்பனார் சிராத்தத்திற்கென்று, தஞ்சாவூருக்கு ‘ஈரங்கி’க் இப் போயிருந்தவிடத்தில் அதை வாங்கிக்கொண்டு வந்தார். ஒரு பாதி தேவைக்கு உபயோகப்பட்டது. மறுநாள் மத்தியானம் பாக்கியை சாவ தாசமாய் ருசி பார்ப்பதற்காக வீட்டு எஜமானி தானே சுளை எடுத்துக் கொண்டிருந்தாள். அரிவாள்மனைக் கொருபுறம் ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் எண்ணெய் இருந்தது. பிசின் கையில் ஒட்டாமல் இருப் பதற்காக அதில் அடிக்கடி விரலைத் துவைத்துக்கொண்டு சுளைகளை எடுத்து இன்னொரு புறம் போடப்பட்டிருந்த பெரிய நுனி இலையில், உள்ளகளை ஒரு ஏட்டிலும், கொட்டைகளை ஒரு ஏட்டிலுமாகப் பிரித்து வைத்துக்கொண்டிருந்தாள். ஆனால் அம்மாள் எடுக்கும் சுளைகளில் ஈசாசரி இரண்டுக்கு ஒன்றுதான் இலைவரையில் எட்டும். மற்றது நடு வழியில் ஞாபக மறதியாய் அவள் வாய்க்குள் விழுந்துவிடும்.
இப்படி மும்முரமாய்க் கையும் வாயும் வேலை செய்யும் தருணத் இல் வாசலில் குழந்தைகள் சத்தம் கேட்டது. தங்கம்மாள் சட்டென்று இட்ட இருந்த ‘அருக்கஞ்சட்டி’ ஒன்றைக் கவிழ்த்து இலையை மூடிக் கொண்டாள். இரண்டு குழந்தைகள் உள்ளே ஓடி வந்தார்கள். இரண்டு பேருக்கும் அநேகமாய் ஒரே வயதுதானிருக்கும்- நாலு நடக்கிறதோ சிரம்பிவிட்டதோ, தெரியவில்லை. “அம்மா, பலாப்பழ வாசனெயடிக் இறந்த, எனக்கில்லையா?” என்று கேட்டுக்கொண்டு வந்த முதல் குழந்தை இறு சிவப்பு, சிரித்த முகம். இடுப்பில் பட்டுக் கயிற்றில் தங்கச் சதங்கை கட்டியிருந்தது. காலில் வெள்ளிக் காப்பு, கழுத்தில் தங்கச் சங்கிலியில் கோத்த தாயத்து. பின்னால் வந்த குழந்தைக்கு இடுப்பில் ஒரு கறுப்புக் என்றும், அதில் ஒரு தேய்ந்த நாய்க்கொடியும் தவிர வேறு ஆபரணம் ஒன்றுமில்லை.
அவன் தன் சிநேகிதனுடன் தாழ்வாரத்தில் ஏறாமல் இடைக்கட்டுக் இதவு நாதாங்கியைப் பிடித்துக்கொண்டே நின்றான். தங்கம்மாள் தன் குழந்தையிடம் இரண்டு பெரிய சுளைகளைக் கொடுத்து, “அவ்வளவு தான் ஓடம்புக்காகாதுரா, கண்ணே” என்று சொல்ல, “நாராயணனுக்கு?” என்றான் அக் குழந்தை. “ஆமாம், அவாத்திலே தினம் பழம் வாங்கின படியே தானேயிருக்கா!” என்று முணுமுணுத்துக்கொண்டு, சூள் கொட்டி விட்டு, உள்ளதுக்குள் சிறியதாயிருக்கும் இரண்டு சுளைகளை அரை மனதாக எடுத்து ‘இந்தாடா’ என்று கூப்பிட்டு அக்குழந்தையிடம் கொடுத்து,’ஓடு, இருட்டிப் போச்சு, இனிமே நாளைக்கு விளை யாடலாம்” என்று கொஞ்சம் அதட்டிச் சொன்னாள்.
அவன் அதை வாங்கிக்கொண்டு வெளியே செல்லும்போது, திண்ணையில் உட்கார்ந்து புஸ்தகம் பார்த்துக்கொண்டிருந்த வைத்தி நாதய்யர் அகமுடையாளைக் கூப்பிட்டு, ‘இன்னும் நாலு சுளை கொடுக்கப்படாதோ, நமக்குத்தானா வயிறு? நேத்திக்கு வேண்டிய மட்டும் தின்னாச்சு. அவனண்டெ ஒரு கூறு கொடு” என்று சொன்னார். அதைக் கேட்டு, திரும்ப ஆவலாய் உள்ளே சென்ற அந்தக் குழந்தை யினிடம் முக்கால் பாகம் சுளை எடுத்த ஒரு கூறை ஒரு இலைக் கிழிசலைப் போட்டு மூடி, “இந்தாடாப்பா, உத்தரவாய்ட்டுது, என்னவோ கொட்டி வச்சிருக்காப்லெதான்!” என்று சலிப்புடன் கொடுத்து, அய்யர் அதைக் கையில் வாங்கிப் பார்க்காதவண்ணம் அந்தக் குழந்தையை வாசற்படி வரையில் கொண்டுவந்து விட்டுவிட்டு உள்ளே சென்றாள்.
தேத்தாரம்பட்டி அக்கிரகாரத்தில் வைத்திநாதய்யர்தான் பணக்காரர். வெகுநாள் குழந்தையில்லாமலிருந்து எவ்வளவோ கோயில் குளங் களுக்குச் சென்றும், விரதங்கள் இருந்தும் அருந்தவப்புதல்வன் பிறந்தான். எப்பொழுதும் குழந்தைகளிடம் அன்புள்ள அவருக்குத் தனக்கு ஒரு புத்திரன் உண்டானதிலிருந்து பிறர் குழந்தைகளிடம் இரட்டிப்பான பிரியம் ஏற்பட்டது. அவர் மனைவியோ என்றைக்கும் குழந்தைகளைக் கண்டால் கரிப்பவள். வெகுநாள் கழித்துத் தான் ஒரு பிள்ளை பெற்றதில் ஏதோ ஒரு அசாதாரணமான காரியத்தைப் பண்ணிவிட்டவள் போல அகமகிழ்ந்தாள். தன் குழந்தை தெய்வப்பிறப்பென்றும் மற்றக் குழந்தை கள் மண்ணைப் பிசைந்து பண்ணப்பட்டவையென்றும் எண்ணினவள் போல், அவர்களோடு சேராமல் கிருஷ்ணமூர்த்தியைப் ‘பொத்திப் பொத்தி’ வளர்த்தாள். எக்காலத்திலுமே நல்லது பொல்லாதது ஒன்றுக் கும் பிறர் வீட்டை எட்டிப் பாராத அவள், தன் குழந்தை இரண்டு மூன்று பிராயம் ஆகி வீடு தாண்டி வெளியே போக ஆரம்பித்ததும், அவன் மற்ற வீடுகளுக்குச் செல்லாமலும் மற்ற குழந்தைகளோடு சேராமலும் இருக்க எவ்வளவோ முயற்சி பண்ணினாள்.
வைத்திநாதய்யருக்கு அவள் காரியம் கொஞ்சமும் பிடிக்கவில்லை. “ஒன்னைப் போல அவனையும் ஓரியாயடிக்கப் பார்க்கறயா!’ என்று எரிந்துவிழுவார். அவளோ, ”இந்த ஊரிலேயிருக்கற தெருத்தரப் பொணங்களுக்கு அஸிகையும் ஆங்காரமும் கணக்கில்லெ. கொழந் தையைக் கண்ணாலே சுட்டுடும். அய்யோ! கொழந்தைகளாங் கொழந்தைகள்! மூக்கொழுகறதும், நாக்கொழுகறதும், கண்டா வாயிலெ டுக்க வறது. தொட்டாலே அழுக்கு ஒட்டிக்கும் போலேருக்கு!” என்றெல்உதாசீனமாய்ப் பேசுவாள். ஆனால் கிருஷ்ணமூர்த்தி அவள் கட்டுப் பாட்டுக்கு முற்றிலும் அடங்கவில்லை. தெருக்கோடியிலுள்ள கூரை வீட்டு நாராயணனும் அவனும் இணைபிரியாத தோழரானார்கள். இது இங்கம்மாளுக்குச் சற்றும் பிடிக்கவில்லை யென்றாலும் அவள் ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஏனெனில் நாராயணன் தகப்பனார், வைத்தி இந்தய்யருக்கு ஒன்று விட்ட மருமகன். தவிர, அச்சிறு வயதிலேயே ராயணன் வெகு சமர்த்தாகவும் கருத்தாகவும் இருந்தான். இது காரணங் பற்றி தன் குழந்தை அவனோடு பழகுவதில் அய்யருக்கு நிரம்பச் சத்தோஷம், நாராயணனோடு பழகுவதால் கிருஷ்ணமூர்த்தி வேறு தோழர்களைத் தேடாமலிருப்பதிலிருந்து தங்கம்மாளும் தொலைந்து சுட்டுமென்றிருந்தாள்.
நாராயணன் தன் வீட்டை நோக்கிப் பழத்தைத் தூக்கிக்கொண்டு விலரந்து சென்றான். போகும்போது தனக்கு என்று கொடுத்த இரண்டு சிது களைகளையும் ஒன்றன்பின் ஒன்றாய் வாயில் போட்டுக் கொண் ர்ன் தேன் மாதிரியிருந்தது. அவனுக்கு அதுவரையில் பலாப்பழ ருசி தெரியாது.
அவன் பெற்றோர் பரம ஏழைகள். அதிலும் தகப்பன் ஆகாவழி. தேராய்ச் சம்பாதிப்பதற்குச் சக்தி முன்பின் இருந்தாலும் உடம்பு வணங்கு வதில்லை. ஊரூராய், கலியாணம் எங்கே, கல்லடுப்பு எங்கே என்று தண்டச் சோறு தின்பதும், பொய்ச் சாக்ஷி சொல்லிக் காப்பிச் செலவு செய் வதும், ரங்காட்டம் ஆடுவதுமாகக் காலம் கழித்துவந்தான். ஒரு மாதத்தில் இருநாள் அரைநாள் வீட்டுக்கு வருவது அபூர்வம். கால் அரை கொண்டு கொடுத்தால் கொடுத்தான். இல்லாமற்போனால் அவன் ஸம்ஸாரம், பாவம், வாயைத் திறக்கக்கூடாது. திறந்தால் அறைதான்.
அந்த உத்தமி எப்பாடோ பட்டுத் தனக்கும் தன் குழந்தைக்கும் வயிறு வளர்ப்பதற்கு வேண்டியது தேடிக் காலந் தள்ளி வந்தாள். அவள் நல்ல புத்திசாலி. ஏழை வீட்டுப் பெண்ணாயிருந்தும் பிறரை இரக்கும் தன்மை கிடையாது. அவள் கை நாலு காரியமும் செய்யும். சற்றுநேரம் * வெறுமனே யிருக்கமாட்டாள். வம்பு வளர்க்க அவளுக்குப் பொழு தும் இல்லை, இஷ்டமுமில்லை. இதனாலேயே அவளைக் கண்டால் தங்கம்மாளுக்கு ஆவதில்லை.
தங்கம்மாள் ஊரிலுள்ள பெண்கள் அவ்வளவு பேரும் தனக்கும் தன் பணத்துக்கும் அடிமைகள் என்றும், தன் உத்தரவை எதிர்பார்த்தவண்ணம் இருக்க வேணுமென்றும் எண்ணங்கொண்டவள். ‘கூப்பிட்ட கொரலுக்கு என்னு கேட்டாத்தானே ஏதாவது ரெண்டு கறியோ, காயோ கையிலே ஆப்பட்டதைக் கொடுக்கத் தோணும்” என்று கூறும் அவளுக்கு ஸதா ச்சுனுஷை செய்யப் பத்துப் பேர் காத்திருப்பார்கள். பகல் முழுவதும் அப்பளம் இடுவதோ, முறுக்குச் சுற்றுவதோ, தோசைக்கு அரைப்பதோ இன்னும் வேறு என்ன வேலை இடுவாளோ அதைச் செய்துவிட்டு, அரைப் படி ஊளை மோர், நாலு அவிசல் கத்திரிக்காய், ஒரு வாழைப்பூ, இவ்வித சன்மானங்களைப் பெற்று மகிழும் அந்த ஏழைகளைத் தங்கம்மாள் சுக்ரீவாக்கினை பண்ணுவாள்.
இதெல்லாம் ராதையிடம் பலிக்கவில்லை என்பதுதான் அவளுக்கு அந்தப் பெண்ணிடம் உள்ள வெறுப்புக்கு அடிப்படை. அவள் அநாவசி யமாய்த் தங்கம்மாள் வீட்டுக்கு வருகிறதில்லை. தன் கணவனுக்கு உறவினர்கள் என்று அவர்களிடம் எவ்வித ஒத்தாசையையும் எதிர்பார்ப்ப தில்லை. அவள் படும் சிரமத்தைப் பார்த்து வைத்திநாதய்யர் ஏங்கல் தாங்கலுக்கு ஏதாவது கொடுத்தால் அதையும் வேண்டாமென்பதில்லை. தங்கம்மாளுக்கு அதைக் கொடுக்காமல் தடுக்கத் தைரியமில்லை. ஆனாலும் அய்யர் காதில் விழாமல் தன் அடிமைகளிடம், “கிளப்புக்காரி பொண்ணுக்கு ராங்கியிலே கொறச்சலில்லே. தவுடு திங்கறதிலெ ஒய்யாரம்!” என்று குரோத வார்த்தை சொல்லி, தன் வயிற்றெரிவை ஆற்றிக்கொள்வாள்.
வீட்டுக்குள் நுழையும்போதே,”அம்மா, கிருஷ்ணமூர்த்தி ஆத்திலே பலாப்பழம் கொடுத்தா, ரொம்ப நன்னாயிருக்கு” என்று சொல்லிக்கொண்டு வந்த குழந்தை தாயாரைக் காணாமல் சமையலறைக் குள் சென்றான். அடுப்பில் பானையில் சோறு கொதித்துக் கொண்டிருந் தது.மினுமினு என்று ஒரு தகரவிளக்கு எரிந்துகொண்டிருந்தது. தாயார் அசைவற்று எரியும் அடுப்பை நோக்கியிருப்பதைக் கண்டு அவள் கவனத் தைக் கலைக்கக்கூடாதென்று தானும் உட்கார்ந்து ஒரு தூணில் சாய்ந்து கொண்டான். பலாப்பழத்தைத் தாயாருக்குக் கொடுக்க வேண்டுமென் றிருந்தாலும் தனக்குத் தெரியாமலே கை சுளையைத் தேடிற்று. இரண்டொரு சுளையே இருந்ததால் அவனுக்குச் சட்டென்று அகப்பட வில்லை. அவனுக்கிருந்த அவசரத்தில் நீண்டு, தடித்திருந்த தாளைப் பிய்த்து வாயில் போட்டுக்கொண்டான்.
“சே,இது தித்திப்பேயில்லியே, அந்த அம்மாமி கொடுத்தது கல்கண்டாயிருந்ததே” என்று ஏமாந்தவன்போல் சொல்ல, அதுவரையில் எதையோ நினைத்துக்கொண்டு மௌனமாயிருந்த அவன்தாய், திரும்பிப் பார்த்து, ‘அதை இங்கே கொண்டா, பார்ப்போம் ” என்று சொல்லிப் பலாப்பழக் கூறைக் கையில் வாங்கி விளக்கு வெளிச்சத்தில் பார்த்தாள். அளிந்து கையால் குளசப்பட்ட இரண்டு மூன்று சின்னச்சுளைகள் தாளால் மூடப்பட்டு மறைந்து கிடந்தன. மற்றதெல்லாம் வெறும் தாளே. தன் குழந்தை முகத்தைப் பார்த்தாள். பழத்தில் ஆவலும், தன் தாய் நல்ல நல்ல சுளைகளை எடுத்துக் கையில் கொடுக்கப்போகிறாள் என்ற நம்பிக்கையும் அவன் கண்ணில் ஜொலிக்கக் கண்ட அவள் வயிற்றைத் துக்கம் அள்ளிப் பிடுங்கிற்று. ”அய்யோ, இப்படிக் குழந்தையை ஏமாத்துவாளா ஒரு பாவி!” என்று சொல்லி பலாக்கூறைக் கீழே போட்டு விட்டு, நாராயணனை வாரிக் கட்டிக்கொண்டாள். கண்களிலிருந்து ஜலம் தாரை தாரையாக வந்தது.
இதைக் கண்ட நாராயணன் ‘விக்கிச்சாப்போல்’ வாயைத் திறக்க வில்லை. அவன் சொற்ப வயதுக்குள்ளாகவே ஏழ்மையின் கொடுமையை தன்கறிந்தவன். பட்டினி பசியை அவன் அதிகமாக லட்சியம் பண்ணுவதில்லை. ஆயினும், ஒரு நாள் கிருஷ்ணமூர்த்தி முந்திரிப் பருப்பு உருண்டை ஒன்றில் ஒரு பாதி கொடுக்க அதை வாங்கித் தின்று அவன் ருசியில் ஈடுபட்டு வீடு வந்ததும் தாயை, “அம்மா, நம்பாத்திலே நீயேன் முந்திரிப் பருப்புண்டை பண்ணல்லெ? கிருஷ்ணமூர்த்தி யாத்திலே பண்றாளே, ரொம்ப நன்னாருக்கே” என்று கேட்டான். அதற்கவள், “அவா பணக்காரா. மிந்திரி தோப்பாய்க் காய்க்கறது. நாம்ப எங்கே போறதுரா அப்பா” என்று அதிவிசனமாய்ச் சொன்ன சொல் அவன் உள்ளத்தில் பதிந்தது. அதிலிருந்து தாயாரை இது வேணும், அது வேணு மென்று கேட்பதை நிறுத்திவிட்டான். இன்றைக்கும் பலாச்சுளை இல்லை யென்று கண்ட அவன் வாய் திறக்கவில்லை. தாய் மடியில் படுத்தபடியே சற்று நேரத்திற்கெல்லாம் தூங்கிவிட்டான். ராதை அடுப்புக் கட்டையை இழுந்து வெளியே போட்டுவிட்டுக் குழந்தைக்கருகே படுத்துக் கொண் டாள், கண்ணீரும் கம்பலையுமாக வெகுநாழி தன் விதியை நினைத்து வருந்தி அவளும் கண் அயர்ந்தாள்.
எவ்வளவு நாழிகை தூங்கியிருப்பாளோ தெரியாது; திடீரென்று விழித்துக்கொண்டாள். யாரோ வாசற் கதவை அவசரமாய்த் தட்டும் சத்தம் கேட்டது. விளக்கை யெடுத்துக்கொண்டு போய்க் கதவைத் திறக்க, அங்கே வைத்திநாதய்யர் நிற்பதைக் கண்டு திடுக்கிட்டாள். எப்பொழு தும் தன்னுடன் பேசாத அவர், ”குழந்தைக்கு உடம்பு சரிப்படல்லை அம்மா, வாயிலெடுக்கிறது, வயிற்றாலும் போறது. எனக்கு ஒண்ணும் புரியல்லெ, சித்தெ வாயேன்” என்றார். அர்த்த ராத்திரி, வீட்டிலோ குழந்தை ஒண்டியாய்த் தூங்குகிறான். வைத்திநாதய்யர் மூஞ்சியை மறுபடி நோக்கினாள். அதில் கண்ட துக்கமும் பயமும் அவளுக்கு மனம் சரிக்கவில்லை. அடுத்த வீட்டுக் கிழவி தெருத் திண்ணையில் படுத்திருந் தாள், தூக்கமில்லாமல் கொக்குக் கொக்கென்று இருமிக் கொண்டிருந்த அவளிடம் குழந்தையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு அய்யர் பின்னே அவர் வீட்டை நோக்கி வேகமாய்ச் சென்றாள்.
மார்கழி மாதம், பொசபொசவென்று தூறல் இது ஒவ்வொரு பேச்சுக் குரல் காதில் விழுந்தது. ஆனால் ஒருவரும் கதவு திறக்கவில்லை, வெளிச்சம் காட்டவு மில்லை. அப்பொழுதுதான் வைத்திநாதய்யர் தன்னைத் தேடிவந்ததின் உண்மையை அவள் ஊகித்தாள். என்ன நடந்ததென்றால், காலராக் காலமானதாலும், கிருஷ்ணமூர்த்திக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி இரண் டும் இருப்பதைக் கவனித்த அடுத்த வீட்டு ஸ்திரீ பரதேசித் தபாலில் இந்தச் செய்தியை ஊர் முழுவதும் ஒரு நொடியில் பரப்பி, அது காலரா தான் என்று ஊர்ஜிதப்படுத்தி விட்டபடியாலும் இரண்டு மூன்று வீட்டுக் கதவைத் தட்டித் தங்கம்மாள் கையாள்களை வைத்திநாதய்யர் கூப்பிட்டுப் பார்த்தும் அவர்கள் அயர்ந்து தூங்குபவர்போல் பாசாங்கு செய்தார்கள். விஷயம் என்ன என்று தெரிந்த பிறகுதான் ராதையை அவர் வந்து கூப்பிட்டது.
விட்டுக்குள் எல்லாம் ஒரே அலங்கோலமாயிருந்தது. தலையாட் டம் கண்ட சமையற்காரிக் கிழவி வெந்நீரில் பிளானலைப் பிழிந்து பிழிந்து கிருஷ்ணமூர்த்தி வயிற்றிலும் முதுகிலும் ஒத்திக்கொண்டிருந் தாள். அவன், உடம்பு கிடைகொள்ளாமல், இங்கு மங்கும் புரண்டும் முக்கிக்கொண்டும், மருண்டு விழித்துக்கொண்டும், நிமிஷத்திற்கொரு தரம் “அய்யோ, வயத்தவலி தாங்கமுடியல்லையே” என்று அலறிக் கொண்டுமிருந்தான். தங்கம்மாள்தலைவிரி கோலமாய்த் தூணில் சாய்ந்து கொண்டு ‘எந்த மகாபாவி கண் பட்டுதோ, யார் சாபம் பலிச்சுதோ, எங்கொழந்தையெ நான் எங்கே இம்மேக் காணப்போறேன்! அட பகவானே, எனக்குச் சாவு வரப்படாதா, என் கொழந்தை நன்னாயிருக்கப் படாதா!” என்று வாயில் வந்தபடியெல்லாம் புலம்பிக் கொண்டிருந்தாள். ராதையைக் கண்டதும், ‘அடி அம்மா ராதே, நீ நல்ல பொண், ஒனக்கு கொழந்தை வயித்தியமெல்லாம் நன்னா தெரியுமுன்னு சொல்லிருக் காளே, எங்கொழந்தை பொழெப்பானா சொல்லேன்!” என்று வெகு தீன மாயும் வணக்கமாயும் அவளைக் காலைப்பிடிக்காத தோஷம் கேட்டாள்.
இதைப் பார்த்ததும் தன் மனதில் ஒன்றுக்கிரண்டாய்க் கிளம்பின வெறுப்பை ஒருவாறு அடக்கிக்கொண்டு, “பகவான் பேரிலே பாரத்தைப் போட்டுப் பேசாமே யிருங்கோ, ஒண்ணும் கெடுதல் நேரிடாது” என்று சொல்லி ராதை குழந்தையின் ஸ்திதியைக் கவனித்தாள். அவளுக்குக் கலியாணமாவதற்குமுன், மருத்துவத் தொழில்புரிந்து காலக்ஷேபம் செய்து வந்த தன் தாய் (இவளைத்தான் தங்கம்மாள் ‘கிளப்புக்காரி’ என்று அபாண்டமாய்ச் சொன்னது) இம்மாதிரி சந்தர்ப்பங்களில் செய்யும் சிகிச்சைகளை நன்கு கவனித்துத் தெரிந்தவளாதலால், யோசனை தடுமாற்றம் ஒன்றுமில்லாமல், வேண்டிய காரியங்களைச் சமையற்காரிக் கிழவியின் உதவியைக் கொண்டு செவ்வனே செய்தாள். அவள் ஊகித்த படியே பலாச்சுளை ஜரிக்காததால் வந்த கோளாறானதால், வசம்பு முதலிய சில சரக்குகள் சேர்த்துச் சுட்டுக் கருக்கு வைத்துக் கொடுத்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் குழந்தைக்கு குணம் கண்டது. கண்ணயர்ந் தான். அவன் கத்தல் கனைத்தல் கொஞ்சம் குறையவே தங்கம்மாளும் குறட்டைவிட ஆரம்பித்தாள். அய்யர் ரேழியிலும், ராதை கூடத்திலும் கண் கொட்டவில்லை.
பொழுது விடிந்தது. உடம்பு குணமாகிவிட்டது என்று தெரிந்த ஊரார் பலர் மும்முரமாக விசாரணை செய்ய வந்தார்கள். உள்ளூர் நாட்டு வைத்தியன் அவசரமாய் வந்து குழந்தை கையைப் பிடித்துப் பார்த்துவிட்டு, ”ஒண்ணுமில்லெ, கொஞ்சம் மந்தமாயிருக்கு. ரெண்டு வேளெ மருந்து கொடுத்தாப்போறது” என்று அபிப்பிராயம் கொடுத்ததைக் சேட்டு அவனே தன் குழந்தைக்குப் புத்துயிர் கொண்டு வந்ததாக எண்ணி, இரு ரூபாயும் படியரிசியும் அவனுக்கு அளந்து கொடுத்துவிட்டுத் தங்கம்மாள் வீட்டுக்குள் சென்றாள். அப்பொழுது, ராதை இனி தான் அங்கிருக்கத் தேவையில்லை யென்று வீட்டுக்குப் போகக் கிளம்பி எதிர்ப்பட்டாள். அவளைப் பார்த்ததும், ‘சித்தெ இரு’ என்று சொல்லி தாழ்வாரத்துள்ளுக்குள் பாய்ந்து பலாப்பழத்தில் பாக்கியுள்ள ஒரு கூறை எடுத்துக்கொண்டு வத்து, “இந்தா,நல்ல பழம் ஒனக்குன்னு வெச்சிருந்தேன்” என்று தாராளமும் அன்பும் ததும்பும் குரலில் சொல்லிக் கையை நீட்டினாள்.
“வாண்டாம் அம்மாமி, நீங்க நேத்திக்கி குழந்தை கிட்டக் குடுத்து அனுப்பிச்ச பழத்தைச் சாப்பிட்டு எனக்கு வயர் நரஞ்சு போச்சு” என்று சொல்லி, ராதை ஒரு சிரிப்புச் சிரித்தாள்.
‘அடி, அது ஒனக்குக் கொடுக்கல்லயே, கொழந்தைக்குன்னா…’ என்று ஏதோ பசப்ப ஆரம்பித்த தங்கம்மாளை மேலே வாயெடுக்கவொட் உடாமல், “அது கடக்கு. நாழியாச்சு, ஆத்துக்குப் போறேன்” என்று சொல்லி, ராதை விர்ரென்று வீட்டுக்குப் போய்விட்டாள்.
அடுத்த வாரம் வைத்திநாதய்யர் வீட்டில் சுமங்கலிப் பிரார்த்தனை கடைபெற்றது. அதற்குத் தங்கம்மாள் காலிறங்கின புடைவை வாங்கிப் பிரார்த்தனை செலுத்தி யாருக்குக் கொடுத்தாள் தெரியுமா? ஆமாம், ராதைக்குக் கொடுப்பதாகத்தான் கிருஷ்ணமூர்த்திக்கு உடம்பு சரிப்படாத தினம் தான் வேண்டிக்கொண்டபோது தீர்மானித்திருந்தாள். ஆனால் புடைவையை வாங்கிக் கட்டிக்கொண்டவள் தங்கம்மாளுக்கு இடை விடாமல் ‘லோட்டா’ப்போடும் தோசைக் குப்பன் பாரியை லோகாம்பாள் அதற்கு ஒரு காரணமும் தங்கம்மாள் தன் கோஷ்டியில் பிரசாரம் பண்ணினதாகத் தெரியவந்தது. “நல்ல சாப்பாட்டுக்கு நாக்குச் செத்துக் கடக்கேன்னு அஸலான பலாப்பழம் ஒரு முழுக் கூறு குடுத்தேண்டீ, இரவது சொளெயிருக்கும். அது வாண்டான்னுட்டு, எரிஞ்சுட்டுப் போய்ட்டாளே, அவ ராங்கியும் தெரிப்பும்! அவ புள்ளே கண்ணுன்னா எங்கொழந்தைக்கி அப்படி உடம்புக்கு வந்தது. பெரியவா பண்ணின புண்ணியம் தலைக்கு வந்தது தலப்பாவோடே போச்சு” என்றாளாம்.