வைதேகி./நம்பிக்கை..

நாள்தோறும் பேருந்தில் ஏறியவுடன்
மூன்று பேர் இருக்கையில் உடைமைகளை
பரப்பியபடி ஒற்றை ஆளாய் அமர்ந்திருக்கும் பெண்மணி
நகர்ந்து இடம் தரும் வரை…
நின்று கொண்டிருக்கின்றேன்..
என் தோள்பையின் கனத்தையும்
புன்னகையின் வீரியத்தையும்
என்றாவது ஒருநாள் உணர்த்தி விடமுடியுமென்ற
பெருநம்பிக்கையை கைப்பிடியாய் பற்றிக்கொண்டு….

2 Comments on “வைதேகி./நம்பிக்கை..”

  1. சிறப்பான கவிதை. மற்றவர் தன் குணத்தை மாற்றிக் கொள்ளாத போது , தான் ஏன் மாற்றிக் கொள்ள வேண்டும் ? மானுடப் பண்புகள் மீதுள்ள அபார நம்பிக்கை , காத்திருக்கும் பொறுமையை த் தருகிறது. பொருட்களை நகர்த்தி , அமர கொஞ்சம் இடம் கொடுக்கக் கூடும் என்ற நம்பிக்கை ரொம்ப அவசியம் . அது இல்லாவிட்டால் , இந்த வாழ்வை , சலிப்பு , கோபம் இன்றி எப்படி கடப்பது ?

Comments are closed.