ம.சக்திவேலாயுதம் கவிதை

எல்லா வேளைகளிலும்
உங்கள் குழந்தைத்தனங்கள்
ரசிக்கப்படுவதில்லை…

எல்லா பொழுதுகளிலும்
உங்களது வேசங்கள்
பொருந்துவதில்லை..

எல்லா நாட்களிலும்
உங்களுக்கான நாள்
அமைந்து விடுவதில்லை..

எல்லா பயணங்களிலும்
உங்களின் இலக்கு
வந்து விடுவதில்லை..

எல்லா மனங்களிலும்
உங்களுக்கான அன்பு
கிடைக்கப்பெறுவதில்லை..

எல்லா முயற்சிகளிலும்
உங்களுக்கான வெற்றி
கிடைத்துவிடுவதில்லை..

எல்லா எழுத்துக்களிலும்
உங்களுக்கான வரிகள்
கண்டறியப்படுவதில்லை..

எல்லா நியாயங்களிலும்
உங்கள் நியாயங்கள்
பேசப்படுவதில்லை..

இந்த கவிதை கூட
எல்லா நேரங்களிலும்
பேசப்பட போவதுமில்லை..

எல்லாவற்றிக்கும்.. எல்லோருக்கும்
ஒரு நேரம்..ஒரேநேரம்..காத்திருங்கள்
இனிய கவிதை போல வரும்!

நெருப்பு விழிகள்