மழை பெய்துக் கொண்டிருந்தது
இவனுக்காக அழுவது போல.
திண்ணையில் நின்றபடி
மழையை
பார்த்துக்கொண்டிருந்தான்
வீட்டிற்குள் அழுகை சத்தம்
இவன் அழவில்லை
இவன் ஆண்மகன்.
அதனால் அழவில்லை
ஆனால் அழவேண்டும்
போலிருந்தது
சார்லி சாப்ளின்
மழையில் நனைந்தபடி
பிறருக்கு தெரியாமல்
அழுவேன் என்றது
நினைவுக்கு வந்தது.
சட்டென தெருவில் இறங்கி
மழையில் நனைந்தபடி
நடந்தான்
சில அடிகள் வைப்பதற்குள்
பின்னால் சத்தம்.
திரும்பி பார்த்தான்
அவன் அம்மா
இவன் தலைக்கு மேலே
குடையை நீட்டியபடி
மழையில நனையாதய்யா
என்று சொல்லி விட்டு
கரைந்து போனாள்
ஒரு நொடி திகைத்தவன்
அழ தொடங்கினான்
மழையில் நனைந்தபடி
தனியாக நின்றுக்கொண்டு
சத்தமாக மிக சத்தமாக
அழுதுக் கொண்டே இருந்தான்
வீட்டிற்குள் மீளா துயிலில் ஆழ்ந்திருக்கும் தன் அம்மாவை
நினைத்து.

ஆஹா அருமை அருமை 👌