S L நாணு
கோவில் நந்தவனத்தில் மலர்களைக் கொய்துக் கொண்டிருந்த பட்டரின் மனதில் ஏக்கம்..
“ஏ நந்தவனத்து மலர்களே.. எங்கள் மனித குலத்தில் தான் ஜாதி மத வேறுபாடுகள்.. சிக்கல்கள்.. ஆனால் கோவில் நந்தவனத்தில் இருக்கும் நீங்களோ வேறுபாடில்லாமல் எல்லோருமே இறைவனை அலங்கரிக்கும் பாக்கியசாலிகள்”
பட்டர் சொன்னதைக் கேட்டு மலர் சிரித்தது..
“இல்லை.. நீங்க சொல்றது சரியில்லை.. நாங்க எல்லாருமே இறைவனை அலங்கரிக்கறதில்லை.. எங்கள்ள சில பேர் நீங்க பறிக்கும் போது தவறி கீழ மண்ணுல விழுந்துடறோம்.. மனுஷங்க காலுல மிதி பட்டு சிதைஞ்சு போயிடறோம்.. சில பேர் நீங்க பறிச்சு பூக்குடைல எடுத்துப் போகும் போதும் சிதறி விழவும் வாய்ப்பிருக்கு.. கோவில்ல வெச்சு எங்களை மாலையா தொடுக்கும் போது.. லேசா கசங்கியிருந்தாக் கூட உடனே ஒதுக்கி வெச்சிருவாங்க.. இதைத் தவிற கடவுள் விக்ரகத்துக்கு அர்ச்சனை பண்ணும் போது.. எங்கள்ள எல்லாருமே கடவுள் மேனில படறதில்லை.. சில பேர் கடவுள் மேனில படாமலே கொடுத்து வெக்காம கீழ விழுந்திடறோம்.. ஆனா என்ன.. எங்கள்ள இவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும்.. மனுஷங்க மாதிரி நாங்க அந்த வேறுபாடுகளை வெச்சுக் கலவரம் பண்ணறதில்லை..”
பட்டர் திடுக்கிட்டு எழுந்தார்…
கனவு..

படிக்கச் சுவையாக இருக்கிறது.
வணக்கம் நாணு
Essarci
ஆறறிவுதான்
பிரச்சனையோ.