தங்கேஸ்/ஒரு சிறிய மின்னல் தீற்றில்

வாசல் நாற்காலி
மழையில் நனைந்து கொண்டிருப்பது
நீயே நனைவது போல் இருக்கிறது
பார்ப்பதற்கு

மின்சாரம் இழையறுந்த பொழுதுகளில் தான்
பின்னி பின்னி மேலேறுகின்றன
இந்த நினைவுகள்

யார் வீட்டிலிருந்து வந்தாலும்
அழுகைச் சத்தம் முதலில் தொடுவது
இதயத்தை தானே

ஒரு சிறிய மின்னல் தீற்றில்
ஜீவலிக்கத் தான்
இந்த பூமி
இன்னும் இருட்டாகவே இருக்கிறது

மழை மேகங்கள் தீர்ந்து போன நாளில்
எஞ்சியிருப்பது
வற்றிய மடுவைப் போன்ற
வெற்று வானமும்
சிதிலமான ஞாபகங்களும் தவிர
வேறில்லை


One Comment on “தங்கேஸ்/ஒரு சிறிய மின்னல் தீற்றில்”

Comments are closed.