
Vulgarity may be the garlic in the salad of life. But here, see how strongly our ‘writer Sujatha’ slashed one reader down…!
(ஒரு வாசகர் சுஜாதா அவர்களைச் சாடுவதும், அதற்கு அவர் கொடுக்கும் சாட்டையடி போன்ற பதிலும்…)
1970 வாக்கில், பொங்கல் மலர் கடைசித்தாள் முதல் பக்கத்தில் எரிக்கா ஜாங் (Erica Jong) பற்றி சுஜாதா அறிமுகம் செய்திருந்தார். போதைப் பொருட்களும் காமவெறியும் தலைவிரித்தாடத் தொடங்கிய காலகட்டத்தில் எழுத வந்தவர் எரிக்கா.
Fruits and Vegetables (1971)
Half lives (1973)
Fear of Flying (1973)
Love roots (1975)
At the edge of the body (1977)
முதலிய கவிதைத் தொகுப்புகளையும் கதைத் தொகுப்புகளையும் படித்துள்ளேன். பிறகு வந்தவை குறித்து தெரியாது. எல்லா தொகுப்புகளும் நம்ம ஊர் ‘சரோஜா தேவி’ புத்தக வரிகளைப் போல இருக்கும். தண்ணி அடித்துவிட்டு பெண்கள் கிடைக்காத நேரத்தில் படித்து மனசாந்தி அடையக்கூடியவர்கள் கையில் இருக்க வேண்டிய ஆபாசக் குப்பைகள்.
எடுத்துக்காட்டாக சில:
I have no penis
I have a pew, two eye
And bleed monthly.
(Playing with the boys கவிதையில்)
The sperms smell of the mango
Reminds me of how long it’s been
Since a man opened me up
And sucked my juice
The sum of my parts
Made hole
(Chastity கவிதையில்)
My breasts ache
My heart skips over cracks
My womb pulls earthworm
With its heavy blood
(Menstruation in May கவிதையில்)
The first month we lived together
I was mad with joy
thinking that a person with a penis
could dream,
talk jokes,
even cry
(The truce between the sexes கவிதையில்)
‘நிகழ்’ பற்றியும் ‘காலச்சுவடு’ பற்றியும் பேசி எழுதி தனக்கொரு இலக்கிய நிர்ணயம் தேடும் சுஜாதா, மூன்றாந்தர கவிதாயினியை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டாம். அற்புதமான தற்கால அமெரிக்கக் கவிஞர்கள் பலரும் இருக்கிறார்கள்.
செயம்கொண்ட சோழபுரம்
கனிவண்ணன்
எரிக்கா ஜாங்கின் மற்றொரு கவிதையின் (சுஜாதாவின்) லேசான மொழிபெயர்ப்பு:
போன ஜன்மத்தில் நான்
ஏதாவது அதிசயமான காரியம்
செய்திருக்க வேண்டும்.
நினைவில்லை
இந்த ஜன்மத்தில்
உன்னை எனக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
ஏதேனும் திடுக்கிடும்படி செய்திருக்க வேண்டும்
புனிதப் பெயரை வென்றிருக்க வேண்டும்
பெரிய தேவாலயம் கட்டியிருக்க வேண்டும்
போப்பாண்டவரை சலவைக் கல்லில்
வடித்திருக்க வேண்டும்
எதற்காக உன்னை எனக்கு அனுப்பினார்கள்.
ஏதாவது உயிரினத்தை அழிவிலிருந்து
காப்பாற்றினேனா?
பென்ஸிலின் கண்டுபிடித்தேனா?
இல்லை…
ராடார்?
சோப்பு?
கோலிக்குண்டு?
சாக்லேட் ஐஸ்க்ரீம்?
இனிப்பான டானிக்?
இல்லை அலம்பக் கூடிய சாயம்?
என்ன இது மாயம்
உன்னை அனுப்பினார்கள் !
கடைசிப் பக்கம் – பிப்ரவரி, 1990.
சென்ற இதழில் ஒரு வாசகர் எரிக்கா ஜாங்கை சரோஜாதேவியுடன் ஒப்பிட்டு, ஜனன உறுப்புகளுடன் தொடர்பு கொண்ட சில கவிதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து உதாரணம் காட்டியிருந்தார்.
இந்த மாதிரி ஆசாமிகளுக்கு நம் அனுதாபங்கள். இவர்கள் கம்பராமாயணத்தில் பதினாயிரம் பாடல்களில் எங்கெங்கே அல்குல் இருக்கிறது என்று தேடுவார்கள். அருணகிரியின் சந்தத்தை விட்டு சரசத்தை நாடுவார்கள். பைபிளில ‘Sermon of the mount’ ஐ துறந்து
Sodomy க்கு ஓடுவார்கள்.
இவர்கள் பேச்சை நம்பி எரிக்கா போன்றவர்களின் நவீன அமெரிக்க இலக்கியத்தின் முக்கியமான கவிதைகளை நிராகரிக்க வேண்டாம். நான் சென்ற இதழில் கொடுத்த மொழிபெயர்ப்புடன் அவருடைய நிஜமான கவிதைகளின் வாசனை தெரிய ஆங்கிலத்திலேயே, இதோ மற்றொன்று.
Real poets are as rare as unicorns.
I don’t mean girls in capes
who fall in love with suicide;
or nasty boys in beards
who are afraid of being influenced
by Shakespeare, Pope, or Yeats;
nor yet the critics with their chipmunk cheeks
full of unwritten poems better than mine…
No – a real poet is a mythological beast;
but the suffering he knows is real.
அசிங்கங்களை சுட்டிக் காட்டுவதில் தப்பில்லை, சிங்கங்களையும் காட்டினால் !
கடைசிப் பக்கம்- மார்ச், 1990.
