
முட்கள்
ரோஜாவின்
பாதுகாவலனென
பெருமை கொள்கிறது!
ரோஜா
தான் முட்சிறையில்
சிக்கித் தவிப்பதாய்
தலையசைத்து அசைத்து
யாரிடமோ விடுதலை
கேட்கிறது!
நான் இல்லையெனில்
நீங்கள் யாரேன
கேலியாய் சிரித்து
முள்ளையும் மலரையும்
காத்து நின்றது
வேர் கொண்ட செடி!
அது செடியல்ல
பிரம்மம்!
பிரம்மனுக்கேது விடுதலை!
30-07-2024
