தங்கேஸ்/மாறாதவை

மழை நாட்களில்
என்றும் மாறாதவை
ஈரச் சிறகுகளை
உதறாமல்
பறந்து வரும்
கருங் காகங்களும்
அது கொண்டு வந்து
சேர்க்கும்
நினைவுகளும்