
வணக்கம்.
கடந்த சில மாதங்களாக செய்த முயற்சி இன்றுதான்
முடிவடைந்தது.
புலனத்தில் கவிதை வாசிக்க எல்லோரையும் அழைத்தேன்.
சிலர் கலந்து கொண்டு கவிதை வாசித்தார்கள்;
சிலர் அலட்சியப் படுத்தினார்கள்; இன்னும் சிலருக்கு என்ன சொல்கிறேன் என்பது புரியவில்லை.
ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் கவிதை வாசிக்க வேண்டும். வாசிக்கிற கவிதைகள் புதிதாக இருக்க வேண்டும். அவர்களுடைய கவிதைகளைக் குரல் பதிவு மூலம் பதிவு செய்ய வேண்டும்.
அப்படிக் கவிதை எழுதி வாசிப்பது எனக்கும்
சவாலாக இருந்தது.
முதலில் புதிய கவிதைகளாக ஒவ்வொரு நாளும் வாசித்துப் பதிவு செய்ய வேண்டும்.
அதன்பின்தான் எனக்கு இந்த ஐடியா தோன்றியது. பதிவு செய்வதை இணைய இதழிலும் , தனியாகப் புத்தகமாகவும் கொண்டு வருவது என்று. உடனே கவிதை வாசித்த
பிறகு இரண்டு இடங்களில் பதிவு செய்து கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் முடிப்பதற்குள் எனக்குத் தடுமாற்றமாக இருந்தது. நான் ஒருநாள் பதிவு செய்வதற்குள் இன்னொருநாள் வந்து கவிதைகளை எல்லோரும் பதிவு செய்து விடுவார்கள் .
இன்னொன்று நான் எந்தப்புத்தகம் கொண்டு வந்தாலும் 100 பக்கங்கள் மேல் கொண்டு வரமாட்டேன்.
புத்தகத்தின் விலையும் ₹ 100 க்குமேல் கிடையாது.
என் திட்டப்படி எல்லாமே தயார் செய்து விட்டேன். எழுதியவர்களின் புகைப்படத்துடன் குறிப்புகளையும் தயார் செய்ய தீர்மானித்தேன். என் நண்பர் வளவ.துரையன் குறிப்புகள் வேண்டாமென்றார்.
எனக்கு குறிப்புகளைச் சேர்ப்பதில்தான் அதிக தாமதமாகி விட்டது.
இதைத் தொடர்ந்து தொகுதி 2, 3 வர உள்ளது. அவற்றில் முதல் தொகுதியில் இடம் பெறாதவர்கள் இடம் பெறுவார்கள்.
இதில் விடாமல் ஒவ்வொருநாளும் கவிதைகளைப் பதிவு செய்தவர் சுரேஷ் ராஜகோபால்.
கவிதைப் பதிவு செய்தவர்களுக்கு ஒவ்வொரு பிரதி இந்தப் புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.
இன்னொரு புத்தகப் பிரதி வேண்டுபவர்களுக்கு 30% தள்ளுப்படியில் புத்தகம் தரப்படும். புத்தகம் வேண்டுவர் 9444113205 Google Payயில் அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறேன்.
11.03.2024 லிருந்து 25.03.2024 வாசித்த கவிதைகளை தேதி வாரியாகப் பதிவு செய்துள்ளேன். இதோ அடுத்தத் தொகுப்புக்குத் தயாராகி விட்டேன்.
