பழநிபாரதி கவிதை

நீரில்லாத நதியில்
நிறைந்து தளும்புகிறது நினைவு

நீயென் கண்களில்
மூழ்கி எழுகிறாய்

ஆடிப்பெருக்கில்
உன்னை நனைத்த
அந்த மஞ்சள்
இன்னும்
உதிர்ந்துவிடாமல்
ஊசலாடிக்கொண்டிருக்கிறது
ஒரு பழுத்த இலையாக

கவிதையை சொல் புதிது என்ற புலனத்தில் பகிர்ந்து கொண்டவர் : அனங்கன்)