அதிரன்/கழுத்தில் பட்டை கட்டிய

மதில் மேல் நின்று கொண்டு
தெருவை வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்தது
கழுத்தில் பட்டை கட்டிய
கருப்பு நாய் ஒன்று.
வீடா? ….தெருவா? …
தெருவா?… வீடா?…
என்ற கேள்வி கேட்டபடி
மனதுக்குள்
வேடிக்கை காட்டி கொண்டிருந்ததது
வெள்ள பூனை ஒன்று.