தி.சோ.வேணுகோபாலன்/எங்கோ மழை ?

கருங்கடல்
வெண்மலை
காலனின் கணக்கறும்
மரணப் பொறிகளில்
இருவிதம்…
கருவியால் மூச்சுக்கு
கவசம் இட்டு
காலடிச் சுவடு
முடியிலும் அடியிலும்
பதிக்க
புடைத்தெழும்
சிலநெஞ்சம்
மானுடப் பெருமை.

இடைப்படும்
தரை தவழ்ந்து
இயற்கையை எதிர்த்திடும்
உரம்பெறா இதயங்கள்
பலகோடி

எதிர்ப்பிலாது
எமன்கால் பட்டழியும்
குறியின்றி
ஊறும்
நினைப்பின்றி
வாழும் (?)
எறும்புகள்

(மீட்சி விண்ணப்பம் என்ற கவிதை தொகுதியிலிருந்து)