
இந்த உலகில்
இருப்பவரில்
இருப்போர்
ஒரு சிலரே
இருப்பார் போல்
நடிப்போரே
பெரும்பாலோர்.
இவருடனே
இறந்தோரும்
இறந்தார் போல்
இருப்பாரும்
இல்லாமலில்லை.
இவருள்ளே
இறந்த பின்னும்
இருந்திடுவார்
யாரென்று
காலமென்னும்
கள்வன்தான்
கண்டறிவான்.
ஷண்முக சுப்பையா/பாதை விதிகள் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)
