
நட நீ
நடைப் பாதையில்
இல்லையேல்
நட நீ
வலப்பக்கமாய்
நடப்பாயேல்
முன்னிருந்து
வருவனவை
ஒவ்வொன்றும்
உன்மேல்
ஏறவரும்.
பார்த்து நீ
ஒதுங்கிடலாம்.
பின் விருந்து
வருவனவை
உன்னருகே
வரவே வரா.
ஒதுங்கியேபோம்.
குறுக்கே தாண்ட
விரும்புவாயேல்
இடம் பார்த்து
வலம் பார்த்து
மேலும் ஓர் முறை
இடம் பார்த்து
நீ தாண்டியே
தாண்டிடுவாய்.
பாதை விதிகள்
இவையெல்லாம்
தெளிவானவை
மிகமிகத்
தெளிவானவை.

2 Comments on “ஷண்முக சுப்பையா/பாதை விதிகள்”
Comments are closed.