
4.
வாழும் சூழல், ஒருவரை எவ்வளவு எளிதாக தாக்கமடைய வைக்கிறது என்பது வியப்புக்குரியது! ஒருவருக்கு ஒருவிதமான சுகமான பதற்றம், வாழ்வில் தேவைப்படுகிறது. இயல்பாகவும் சுதந்திரமாகவும் அவர் விகசிப்பதற்கு இதமான கவனிப்பு வேண்டுமென விரும்புகிறார். மிகச் சிலருக்கே இத்தகைய சூழல் அமைகிறது; ஆக, உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் பலரும் வளர்ச்சி குன்றிப்போகிறார்கள்.
இருந்த அந்த அசாதாரண சூழலில், மன விகாரம் அடையாமல் தப்பித்து, நீ இருப்பதைப் பார்த்து நான் வியந்து போகிறேன். அந்த அசாதாரண சூழலால் நீ ஏன் முழுவதுமாக அழிந்துபடவில்லை, கறைபடவில்லை, கசக்கப்படவில்லை என்பதை அறிய முடிகிறது. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக வெளிப்புற நடவடிக்கைகளை அப்போது நீ சமாளித்துக் கொண்டாய். உள்முகமாக உன்னை நீ தூக்கத்தில் ஆழ்த்தி விட்டாய். இந்த உள்முக உணர்வின்மைதான் உன்னைக் காப்பாற்றியது. உணர்ச்சி மேலீட்டுடன் உள்முகமாக விழிப்புணர்வையும் கொண்டிருக்க அப்போது நீ விரும்பியிருந்தால், உன்னால் அந்தக் கஷ்டத்தை தாங்கியிருக்க முடியாது, சச்சரவுகள் தோன்றியிருக்கும். நீ நிலைகுலைந்து போயிருப்பாய். எதிரணி, உனக்கு முத்திரை குத்தி கரும்புள்ளி வைத்திருக்கும். தற்போது உள்முக விழிப்புணர்வுடனும் தெளிவுடனும் இருக்கிறாய். நிலவும் சூழலோடு உனக்கேதும் போராட்டம் இல்லை.
சூழலோடு தொடுக்கும் போராட்டம்தான், மன விகாரத்தை ஏற்படுத்துகிறது. உள்முகமாக மிகுந்த விழிப்புடனும், வெளிப்புற செயல்பாடுகளுக்கு ஆரோக்கிய மான இணக்கத்துடனும் இருந்தால், எப்போதுமே வடுபடாமல் நீ இருக்க முடியும்.
அதிகாரத்தை விரும்பும் ஒருவர், தன் உடைமையாகக் கொண்டிருப்பது மிகவும் சொற்பமே என்றாலும், அவரும் உலகாயதமானவரே. அதிகாரம் கைக்குள் இருக்க வேண்டும் என்ற விருப்பம், எந்த வடிவில் இருந்தாலும், அது உலகாயதமே. அதிகாரத்திலிருந்து கொண்டு, கட்டளைப் பிறப்பிக்கும் எவராயினும், அவர் துறவியோ, பெரும் முதலீட்டாளரோ, அரசியல்வாதியோ, போப் ஆண்டவரோ, எவராயினும், அவர்களனைவரும் உலகாயதமானவர்களே.
அதிகாரத்தைப் பெற்றுவிட வேண்டும் என்ற அடங்காத ஆசை, ஒருவரிடம் மூர்க்கத்தனத்தை வளர்க்கிறது மேலும், சுயமுக்கியத்துவத்தை அழுத்தமாக சொல்லிக் கொள்கிறது. தன்முனைப்புடன் கூடிய ஆக்ரமிப்புச்
செயலின் சாரம், உலகாயதமாகும்.
அடக்கம் என்பது எளிமை. ஆனால், முயற்சியால் வளர்க்கப்பட்ட போலியான அடக்கம், உலகாயதத்தின் மற்றொரு வடிவமாகும். மாற்றுப்பொருளாக இருக்கும் போலியான ஒன்று நிலைக்காது, சீக்கிரமே உதிர்ந்துவிடும்.
அகத்தே நிகழும் மாற்றங்களையும், பின்னடைவுகளையும், போராட்டங்களையும் சீர்குலைவுகளையும் பற்றிய விழிப்புணர்வை மிகச் சிலரே பெற்றுள்ளனர். அவர்களும், அவ்விழிப்புணர்வை ஒதுக்கி வைத்து விடவோ அல்லது அதிலிருந்து தப்பித்தோடவோ தான் முயற்சிக்கிறார்கள். நீ அவ்வாறு செய்யாதே. அவ்வாறு நீ செய்வாய் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால், உன் எண்ணங்களோடும் உணர்வுகளோடும் மிக நெருக்கமாய் வாழ்வதில் ஒரு அபாயம் இருக்கிறது.
பதற்றமின்றியும் நெருக்குதலின்றியும், தன் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைப் பார்த்து அவற்றைப் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டிருக்கவேண்டும். உன் வாழ்வில், உண்மையான புரட்சியொன்று நிகழ்ந்துள்ளது. எண்ணங்கள் மற்றும் நிகழ்வுகளைப் பற்றிய உன் உணர்வுகள் பற்றிய விழிப்புணர்வு உன்னிடம் கட்டாயம் இருக்கும். அவ்வெண்ணங்களையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்தாதே, தடுத்து நிறுத்தாதே. மென்மையான நிகழ்வைப்பற்றியதோ
கொடுமையான நிகழ்வைப் பற்றியதோ எதுவாயினும், எண்ணங்கள், மடை திறந்து போகட்டும், ஆனால், அவற்றைப்பற்றிய விழிப்போடு இரு.
விருப்பங்கள் என்று ஏதேனும் உனக்கு உள்ளதா? சதா எண்ணிப்பார்த்துக் கொண்டு மனதை ஆக்ரமிப்பதாய் உள்ள ஆசைகள் ஏதாவது உள்ளதா? உண்மையில், உலகம் உன்னதமான இடம். ஆனால் நாமோ அதிலிருந்து விலகியோடப் பார்க்கிறோம். வழிபாடுகள், பிரார்த்தனைகள், பிரேமைகள் மற்றும் பயங்கள் மூலம் உலகிலிருந்து தள்ளியிருக்கப் பார்க்கிறோம்.
மனோரீதியில் நாம் செல்வந்தரா அல்லது ஏழையா என்பது பற்றி நமக்குத் தெரியாது. ஆழ்ந்த உள்முகப் பயணத்தை நாம் என்றுமே மேற்கொண்டதில்லை. ‘உள்ளது’-ஐ கண்டறிந்ததில்லை. மேற்பரப்பில் மேலோட்ட மாய் வாழ்கிறோம், அற்பசொற்பத்தால் திருப்தியடைந்து விடுகிறோம். அந்த அற்ப விஷயங்கள் நம்மை சிலசமயம் சிரிக்க வைக்கின்றது, சில சமயம் அழ வைக்கிறது.
நம் அற்பமான மனது, அற்பமான பிரச்சினைகளையும் அவற்றிற்கான அற்பமான பதில்களையும் கொண்டுள்ளது. இப்படியாக நாம் காலம் கழிக்கிறோம். நாம் அன்பு செலுத்துவதில்லை. அப்படியே அன்பு காட்டினாலும், அது எப்பொழுதுமே பயம், சலிப்பு, துக்கம் மற்றும் ஏக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்தே இருக்கிறது. கள்ளங்கபடமில்லாமல், மாசற்ற மனதுடனிருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.
வாழ்க்கையில், அனுபவங்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது. சொல்லப் போனால், அவை தேவையானவை கூட வாழ்க்கை என்பது தொடர்ந்து வரும் அனுபவங்களின் தொகுப்பாக இருக்கிறது. ஆனால், அனுபவங்களின் காரணமாய், கூடிக்கொண்டுபோகும் விருப்பங்களால், மனம், தன்னைப் பாரமாக்கிக் கொள்ளக் கூடாது.
ஒவ்வொரு அனுபவத்தையும், பதிவு செய்யாமல் அழித்துவிட்டு, தன்னை பாரமாக்கிக் கொள்ளாமல் மாசற்ற தன்மையோடு வைத்துக்கொள்ள மனதால் முடியும். அவ்வாறு செய்யாத மனம், புத்துணர்வோடும் விழிப்புடனும் இணக்கத்தோடும் இருத்தல் இயலாது. மனம் இணக்கத் தோடு இருப்பது எப்படி என்பதல்ல பிரச்சினை. எப்படி என்று வினவுவது, ஒரு வழிமுறைக்கான தேடுதல்.
வழிமுறையின் மூலம் செயல்படுவது, மனதை ஒருபோதும் மாசற்றதாக்காது. அவ்வழிமுறையில் மனம் முறைப்படி செயல்படலாம் ஆனால், மனம், மாசற்ற pதாகவோ படைப்புத்திறன் கொண்டதாகவோ வழிமுறையின் மூலம் ஆக முடியாது.

One Comment on “ஜே. கிருஷ்ணமூர்த்தி/ஏதுமாய் இல்லாதிருப்பவனே மகழ்ச்சியானவன்”
Comments are closed.