அதனதன் இடம்

மதுவந்தி

மேசை மேல்
படித்துப் பாதி
மூடி வைத்த
ராமயணப் புத்தகம்.
எடுத்து சரியாக
வைக்கத் திறந்தால்,
புத்தகத்தின் நடுவிலிருந்து
சிதறிய சீனித் துகளுடே
ஒரு சிற்றெறும்பு உயிர் தப்பி
ஆச்சரியத்தோடு விரைந்து
இறங்குகிறது.

2 Comments on “அதனதன் இடம்”

    1. பாட்டி ராமாயணம் படிக்கும் போது நைவேத்யம் என எதாவது வைத்து, பின் எல்லோருக்கும் கொடுப்பாள். ஒன்றும் இல்லாத நாட்களில், கொஞ்சம் சர்க்கரை வைத்து நைவேத்யம் செய்வாள். அதில் சிதறிய துகள் புத்தகம் நடுவே.

Comments are closed.