
………..
ஆசிரியர் கலைமகள்………..………..
பாம்படம் என்னும் அணிகலன் பெண்கள் காதில் அணியும் அணிகலன் ஆகும். குறிப்பாக தென் தமிழகத்தில் திருநெல்வேலி இராமநாதபுரம் மதுரை போன்ற மாவட்டங்களில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பாக வயதான பெண்மணிகள் இந்த ஆபரணத்தை அணிந்திருப்பதைப் பார்த்திருக்க முடியும்! கீழாம்பூர் கிராமத்தில் எனது வீட்டிற்கு தயிர் கொண்டு வரக்கூடிய பேச்சி என்கிற பெண்மணியின் காதில் பாம்படம் அணிகலனாகத் தொங்கியதை நானே கண்டிருக்கிறேன்!
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பாப்படம் அல்லது பாம்படம் என்று அழைக்கின்றனர். இந்தக் காதணி அணிவதற்காகவே காது வளர்க்க வேண்டியிருக்கும். இதனைக் காது வடித்தல் என்று கூறுவர். இதற்காக அந்தக் காலப் பெண்கள் காது வளர்த்தனர். இவ்வாறு காது வடிக்கும் பழக்கம் 1980-கள் வரை வழக்கத்தில் இருந்து வந்தது என்று அறிய முடிகிறது…………
முருக்கச்சி, தண்டட்டி, நாகவட்டம், முடிச்சு, சவுடி உள்ளிட்டப் பெயர்களிலும் பாம்படம் அழைக்கப்படுகிறது………..
வடிகாது என்ற “காதுவடித்தல்” வழக்கம் தமிழ் மக்களிடையே சங்க காலம் தொட்டு மங்கலச் சின்னமாக, இருந்து வந்துள்ளது!! காது துளையிடப் பெற்று வடிகாதாக நீட்சி பெறச்செய்வார்கள். இதனை காது வடித்தல் என்றும் கூறுவார்கள்.இது உயர்வான அழகுணர்ச்சியின் அடையாளமாகக் கருதப் பெற்றது. ஒரு பெண்மணியின் செல்வச் செழிப்பைப் பொறுத்து பாம்படத்தின் அளவு மாறுபடும்! இரண்டு “கழஞ்சி” (கழஞ்சு) எடை அளவில் ஒரு காதில் உள்ள பாம்படம் இருக்கும்!
கழஞ்சு என்பது தங்க நகையை அளக்கப் பயன்படுத்தப்பட்ட அளவீடு முறையாகும். ஒரு கழஞ்சு என்பது 5கிராமாகும். கழஞ்சு என்ற சொல் பாண்டியர் ஆட்சி காலத்தில் பயன்படுத்தப்பட்டது. இப்போதும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் புழக்கத்தில் உள்ள சொல் இதுவாகும்…….
” என்னமோ தேசாந்திரியாகப் போயிட்டதாகச் சொல்லுவார்களே, அந்த மாமாவா? வாருங்க மாமா, சேவிக்கிறேன்” என்று குடத்தை இறக்கி வைத்துவிட்டு விழுந்து நமஸ்கரித்தாள். காது நிறைந்த பழங்காலப் பாம்படம் கன்னத்தில் இடிபட்டது……..”கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்” என்னும் புதுமைப்பித்தனின் சிறுகதையைப் படிக்கும் போது பாம்படம் அணிந்த பெண்ணின் அழகு உணர்ச்சியைத் தெரிந்து கொள்ளலாம்…………

அருமை