
குலம், கோத்திரம், ஜாதகம். ஜாதி;
முப்பாட்டன், பாட்டி.. தாய், தந்தை, தலைமுறை
பெயர் பட்டியல் ;
பெயர் சூட்டும் பெருவிழா !
அழகுப் போட்டி!
எதுவும் இல்லை
தெரு நாய்
குழந்தை மறுத்த சோற்றுக்கு
சொந்தம் கொண்டாடி
வாலாட்டி வலைவிரித்து
குழந்தையின் மூலம் குடியேறிவிட்டது:
எனக்கு நாயிடம்
பகையுமில்லை : உறவுமில்லை
விரட்டவுமில்லை ; வருடவுமில்லை
குழந்தை சிரித்தால் சரி
'எழுத்து' ஜூலை 1969
