
சந்தன முகத்தோனே
சடுதியில் வாருமய்யா.
சங்கடம் கரைந்திடவே
மயிலேறி வாருமய்யா…
சுடர்மிக்க ஒளியானே
சுவைமிக்க கனியானே
சுந்தர வடிவேலா
சுகம் கொஞ்சம் தாருமய்யா …
உன் வில்லானப் புருவத்திலே
கரும வினைகளைக் களைபவனே..
உன்கூர் செவித்திறத்தாலே
பக்தர்களின் குறைக் கேட்பவனே..
அருள் தரும் விழியாலே
கருணைகள் பொழிபவனே….
உனக்கு அனந்தக்கோடி நமஸ்காரம்
எங்கள் உள்ளமெல்லாம் உன்கீதம்…
உன் நாசி விடும் மூச்சாலே
எங்கள் நாடியொலி நிலைக்குதய்யா…
உன் திருவாய் திறப்பாயே
எங்கள் இருள் எல்லாம் களைவாயே..
ஒளிமுக நாயகனே
எங்கள் வாழ்வில் ஒளியேற்ற பிறந்தவனே..
இன்னல்களைத்
தீருமய்யா
இன்பங்களைத் தருமய்யா
வேண்டி வந்து நிற்கின்றோம்
எங்கள் வேண்டுதலை கேட்டு அருள்வீர்..
பதினாறு
செல்வங்களும்
பழுதின்றி தாருமய்யா..
எங்கள் குறைகளைப் பொருத்தருள்வாய்
நிறைகளை நிறைத்திடுவாய்..
அன்பாய் வாழ்வதற்கே
இந்த ஜென்மங்களுக்கு அருள்செய்வாய்..
வடபழனி வேலவனே
வடிவான சண்முகனே
மஞ்சள்நிற ஒளியானே
மங்கலங்கள் தாருமய்யா
நிலைமங்கலங்கள் தாருமய்யா
