பாட்டியின் காலத்தில்
பக்கபலமாயிருந்தேன!
அம்மாவின் அரவணைப்பில்
அசைந்தபடி நானிருந்தேன்!
மகளே.. உன் காலத்தில்
மறைவிலே இருக்கிறேன்..
பேத்திகள் என்னை..
இணையத்தில் பார்க்கலாம்.. ஆட்டுக்கல் என்றால் என்ன? என்று கேட்கலாம்! கூகுளில் தேடலாம்.. அருங்காட்சியகத்தில் ஆட்டுக்கல்லை வைக்கலாம்! எனக்கொரு நடுக்கல் எதிர்காலம் வைக்கலாம்!
இட்டலிக்கு சட்டினிக்கு
என்னிலே ஆட்டினார்!
இப்போது என்நிலைமை
எல்லோர்க்கும் புரியலாம்!
பழமையை மறக்காதே! புதுயுகம் பிறந்தாலும்
ஆட்டுக்கல்லை வெறுக்காதே!
.
