
தன்னிகர் அற்ற,
தனிக் கொடி.
பட்டொளி வீசி,
பறக்கும் கொடி.
பளிஞனும் இருளனும்,
பணியும் கொடி
செழுமை காட்டும்
பச்சை வர்ணம்;
உயர்வைச் சுட்டி,
உயர்ந்த கொடி
தூய்மை விளக்கும்
வெண்மை நிறம்;
அமைதி துலங்கும்,
அருட் கொடி
தியாகம் துளங்கும்
காவி நிறம்;
தீரம் செறிந்த,
வீரக் கொடி
தர்மம் விளையும்
மண் இதுவென,
முரசு கொட்டும்
அறக் கொடி.
பாரத தாயின்
மணிக் கொடி;
இதனை, பணிந்தே
போற்றி ஏற்றிடுவோம்.
